search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Britain"

    இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. #IndiaSrilanka #Documents #Destroyed
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.

    இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.

    இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.

    ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.  #IndiaSrilanka #Documents #Destroyed
    மகாராஷ்டிராவில் உள்ள மும்பை டப்பாவாலாக்கள், பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்தை இனிப்புகள் கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். #PrinceHarry #Dubbawalas
    மும்பை:

    பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

    இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 

    இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் திருமணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாட மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர்.



    இதுகுறித்து மும்பை டப்பாவாலாக்கள் அசோசியேஷனின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினர். அங்கு சென்ற எங்களுக்கு பிரிட்டன் ராஜ குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அந்த வரவேற்பை கவுரவிக்கும் வகையில் இளவரசர் ஹாரியின் திருமணத்தன்று மும்பையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளான டாடா மெமோரியல் மருத்துவமனை, கே இ எம் மருத்துவமனை மற்றும் வாடியா மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #PrinceHarry #Dubbawalas
    ×