search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bramorchavam"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, நேற்று மாலை 4 மணி முதல் 4-45 மணி வரை மகர லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர்யாதவ், முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குவதற்காக ஆந்திர-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பகல் 1 மணிக்கு கார் மூலம் திருமலைக்கு வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு ஆந்திர மாநில அரசு சார்பில், மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்றார். சந்திரபாபுநாயுடுவுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதான அர்ச்சகர்கள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவுக்கு பரிவட்டம் கட்டினர்.

    பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்களை ஒரு வெள்ளித்தட்டில் வைத்து, திருமலையில் உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை மேள தாளம் முழங்க முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தனது தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக வந்து மூலவர் வெங்கடாஜலபதியின் பாதத்தில் வைத்து, பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டார். பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு தீர்த்த பிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவரான மலையப்பசாமி தங்க, வைர அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 17-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரை கருடசேவை நடக்கிறது. 18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டம், 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், 21-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து 7.30 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    மணக்குள விநாயகர் கோவிலில் 60-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.
    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக கொண்டாடப்படும்.

    அதன்படி 60-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி அனுக்ஞை. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி நாள் தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனை நடைபெற உள்ளது.

    விழாவில் வருகிற 21-ந் தேதியன்று சித்தி புத்தி விநா யகர் திருக்கல்யாணம், 25-ந் தேதி தேரோட்டம், 26-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி, வெள்ளி மூஷிக வாகன வீதி உலா, 27-ந் தேதி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழாவில் 28-ந் தேதி இந்திர விமானம், 29-ந் தேதி முத்து விமானம், 30-ந் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலா, செப்டம்பர் 1-ந் தேதி ஊஞ் சல் உற்சவம், 3-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற் றும் 8-ந் தேதி 108 சங்காபி ஷேகம் நடக்கிறது.
    மணக்குள விநாயகர் கோவிலில் 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

    இதில் வருகிற 21-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவமும், பவுர்ணமி கடல் தீர்த்தவாரியும், வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும், 27-ந் தேதி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    விழாவில் 28-ந் தேதி இந்திர விமானம், 29-ந் தேதி முத்து விமானம், 30-ந் தேதி முத்துபல்லக்கு வீதிஉலாவும், செப்டம்பர் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 3-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் 8-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. இதில் தினந்தோறும் மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

    ராஜகோபாலசுவாமி தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் வருகிற 31-ந் தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2-ந் தேதி வேடுபறி உற்சவமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும், மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது. இதை தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 5-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    சென்னை குரோம்பேட்டையை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது
    சென்னை குரோம்பேட்டையை அடுத்த மாடம்பாக்கத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    18-ந்தேதி கிராமதேவதை உற்சவம், 19-ந்தேதி விநாயகர் உற்சவம், 20-ந்தேதி கொடியேற்றம், ரிஷப வாகனம், 21-ந்தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை, 22-ந்தேதி அதிகார நந்தி வாகனம், பூத வாகனம், 23-ந்தேதி தொட்டி உற்சவம், நாக வாகனம், 24-ந்தேதி கற்ப விருட்ச வாகனம், ரிஷப வாகனம், 25-ந்தேதி தொட்டி உற்சவம், யானை வாகனம், 26-ந்தேதி காலை தேரோட்டம், 27-ந்தேதி குதிரை வாகனம், 28-ந்தேதி இந்திரவாகனம், 29-ந்தேதி தீர்த்தவாரி தொட்டி உற்சவம், இரவில் திருக்கல்யாணம், 30-ந்தேதி காலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா ஆகியவை நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராம மக்கள் செய்துள்ளனர். 
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உலக புகழ்பெற்றது. இக்கோவிலில் சனிபகவான் தனியாக சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிதோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிகம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    இந்த விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரம்மோற்சவத்தில், வருகிற 18-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லாக்கில் வீதி உலாவும், 25-ந் தேதி காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலாவும், 27-ந் தேதி தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ×