search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajagopalaswamy temple"

    • அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
    • இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.

    கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில்.

    சின்ன கோவில் இது. இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.

    அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

    யார் என்ன பாவத்தை செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்,

    அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.

    இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.

    • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
    • வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராஜகோபாலசாமி கோவில் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் செங்கமலத்தாயாருக்கு ஆடிப்பூர திருவிழா கொண்டாப்படும்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர உற்சவ திருவிழா நேற்று செங்கமலத்தாயார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சேனை முதல்வர் நகர் சோதனை முடித்து சிம்மக்கொடி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீட்சிதர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்து திருவாராதனம் எனும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர். செங்கமலத்தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடிப்பூர திருவிழாவையொட்டி 10 நாட்கள் செங்கமலத்தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகி்ன்றனர்.

    • பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாளை ராஜ கோபாலசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டம்

    ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் 10- ம் திருநாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.

    இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி தேருக்கு எழுந்தருளினார். 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த குழுவினரால் அருளப் பாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

    தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    கோவிந்தா... கோபாலா... கோஷம்

    இதில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி மிக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. பெரிய தேர் பழுதடைந்து உள்ளதால் சின்ன தேரில் தேரோட்டம் நடந்தது.
    பாளையங்கோட்டை வேதநாராயணர், அழகியமன்னார், ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது.

    5-ம் திருவிழாவன்று காலையில் வேதநாராயணர், வேதவல்லி, குமுதவல்லி தாயாருக்கும், அழகியமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும், ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் இரவில் கருட வாகனத்தில் ராஜகோபால், அழகியமன்னார் வீதி உலா நடந்தது.

    நேற்று முன்தினம் இரவில் சுவாமி, தேர் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பெரிய தேர் பழுதடைந்து உள்ளதால் சின்ன தேரில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ராஜகோபால சுவாமியுடன் ருக்மணி, சத்யபாமா தாயாரும் தேருக்கு எழுந்தருளினார்கள். காலை 7.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இரவில் சுவாமி தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் வீதிஉலா நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சப்தாவரணத்தில் அழகியமன்னார், ராஜகோபால சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
    விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. இதில் தினந்தோறும் மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

    ராஜகோபாலசுவாமி தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் வருகிற 31-ந் தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2-ந் தேதி வேடுபறி உற்சவமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும், மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது. இதை தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 5-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    ×