search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவஸ்தலம்"

    • சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில் இத்தலம் 14வதாக போற்றப்படுகிறது.
    • விமானம் வைதீக விமானம். குளத்திற்கு வடக்கே ஹேமமுனிவர் சன்னதி உண்டு.

    சாரங்கபாணி கோவில் காவிரியாற்றின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது.

    சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை ராஜகோபுரம் உண்டு.

    மூன்று பிரகாரங்களை உள்ளடக்கியது.

    மூலவர் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள்.

    உத்யோக சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலை.

    ஆராவமுதன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    இத்தலத்தில் உள்ள இறைவன் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தி காட்சியளிப்பதால் சாரங்கபாணி என்று பெயர் பெற்றார்.

    தாயார் கோமளவல்லித் தாயார்.

    புஷ்கரணி, ஹேமபுஷ்கரணி, மற்றொரு பெயர் பொற்றாமரைக்குளம்.

    விமானம் வைதீக விமானம். குளத்திற்கு வடக்கே ஹேமமுனிவர் சன்னதி உண்டு.

    வசந்தமண்டபம், 100 கால் மண்டபமும் இந்த கோவிலுக்கு தனிச்சிறப்பு.

    ஹேமமுனிவரின் மகளாகத் தோன்றிய திருமகள், இத்தலத்தில் தவம்புரிந்து கோமளவல்லி என்ற பெயர் கொண்டு இத்தல இறைவனை மணந்ததாக ஐதீகம்.

    உபய பிரதான திவ்விய சேத்திரமான இத்தலத்தில் மூலவருக்கு என்ன சிறப்பு செய்யப்படுகிறதோ, அதே சிறப்பு உற்சவ மூர்த்திக்கும் செய்யப்படுகிறது.

    கோமளவல்லி தாயார் இதுவரை கோவிலை விட்டு வெளியே வந்ததில்லை.

    எனவே தாயாருக்கு படிதாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு.

    உத்ராயண புண்ணிய காலத்தில் அதற்குரிய உத்ராயண வாசல் வழியாகவும், தட்சிணாயண காலத்தில் தட்சிணாயண வாசல் வழியாகவும் சென்று தான் பகவானைத் தரிசிக்க வேண்டும்.

    சுவாமியின் கருவறையே தேர் வடிவில் பிரமாண்டமான சக்கரங்களைக் கொண்டு மிக நுண்ணிய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.

    சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில் இத்தலம் 14வதாக போற்றப்படுகிறது.

    இப்பெருமாளுக்கு "ஆராவமுதன்" என்று ஸ்ரீமந் நாத முனிகள் திருப்பெயர் சூட்டியிருக்கிறார்.

    ஸ்ரீ ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களா சாசனம் செய்துள்ளனர்.

    • இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.
    • பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.

    சக்ரபாணி திருக்கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்த இந்த திருக்கோவில், மற்ற கோவில்களை விட வித்தியாசமானது.

    இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.

    முன்னொரு சமயம் "இரண்யாட்சன்" என்ற ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டான்.

    இதனால் பெரிதும் கலக்கமுற்ற வானவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று,

    நடந்ததை சொல்லி, பூமாதேவியை அந்த அசுரனிடமிருந்து காக்கும்படி வேண்டினார்கள்.

    அந்த அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட பூமியைக் கொண்டு வர திருமால் வராக அவதாரம் எடுத்தார். பாதாளம் புகுந்தார்.

    அந்த இரண்யாட்சனுடன் கடுமையாக போர்புரிந்து தனது ஒரு கொம்பினால் அவனையும், அவனை சார்ந்த அசுரர் கூட்டத்தையும் அழித்தார்.

    அசுரர்கள் கொல்லப்பட்ட பின்பு வராகமூர்த்தி, தனது இன்னொரு கொம்பினால் பூமியை பாதாள உலகத்திலிருந்து தாங்கி, மீட்டுக்கொண்டு மேலே வந்தார்.

    பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.

    இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.

    திருமாலை சரண் அடைந்தால் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு அடையாளமாக விளங்குவதுதான் குடந்தையில் உள்ள இந்த ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்.

    • மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார்.
    • தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.

    இந்த கோவில் அழகான பல்வகையான மந்திர&தந்திர சிறப்புகளைக் கொண்டது.

    காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் இத்தலம் அமைந்துள்ளது.

    கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.

    ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.

    மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

    தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.

    சக்ரபாணியின் எட்டு கைகளுடன் கூடிய திருக்கோலத்தை காண விரும்பிய பிரம்மா, சூரியன், அக்னி, திருமகள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்ட்சயம் ஆனார் என்பது மிகச்சிறப்பு.

    இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் சக்கர வடிவமாக தாமரைப் பூவில் அறுகோண யந்திரத்தில் காட்சி தருகிறார்.

    முன்னொரு சமயம் குடந்தையில் தங்கி தவம் செய்த தேவர்களை முனிவர்களை, அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்து துன்புறுத்தினர்.

    ஒருகால கட்டத்தில் தொந்தரவு, அளவுக்கு அதிகமாகப் போகவே, அவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பெருமாள் தனது கையிலிருந்த சுதர்சன சக்கரத்தால் அசுரர்களை கொன்று அழித்தார்.

    அன்று எந்த கோலத்தில் நின்று அசுரர்களை அழித்தாரோ அதே கோலத்தில் இன்ற நமக்கு கருணை கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    • அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
    • இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.

    கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில்.

    சின்ன கோவில் இது. இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.

    அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

    யார் என்ன பாவத்தை செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்,

    அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.

    இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.

    • சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
    • பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.

    இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.

    தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.

    "ஆதிகும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது.

    கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.

    5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும்

    சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.

    நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.

    திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.

    ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.

    கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.

    • இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.
    • சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

    இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.

    சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் ஏராளமான இயற்கை வளம் பொருத்தி செழிப்பாக விளங்கியது.

    மாளிகை, கோட்டைச்சுவர் என்றெல்லாம் இந்த ஊரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

    இங்குள்ள சிவபெருமானுடைய கோவிலைச் சுற்றி மிக பலமான கோட்டை கட்டப்பட்டிருந்ததால் கோட்டைச் சிவன் கோவில் என்று வழங்கப்பட்டு வருகிறது.

    அமிர்த கலசத்தின் நடுப்பகுதி இங்கு தங்கியதால் கலயநல்லூர் என்ற பெயர் முதலில் ஏற்பட்டது.

    இந்த இடத்தில் பிரம்ம தேவர் தவம் இருந்து சிவபெருமானே வழிபட்டு வந்ததால் இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.

    உமையவளே இங்கு வந்து கடுந்தவம் புரிந்து உயிர்களைக் காக்க முயற்சித்ததோடு சிவபெருமானையும் விரும்பி அமர்ந்த இடம் என்று தனிச்சிறப்பும் பெற்றது.

    இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.

    இங்குள்ள தீர்த்தத்திற்கு நால்வகைத் தீர்த்தம் என்று பெயர்.

    • ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.
    • அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

    இந்த அழகிய திருக்கோவில் கும்பகோணம் ரயில் சந்திப்பிலிருந்து வடமேற்கில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    மகா பிரளயத்தின் பொழுது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் உடைக்க எண்ணியபொழுது

    இந்த இடத்தில் நின்று கொண்டுதான் கும்பத்தின் மீது பாணம் தொடுத்தார்.

    பாணம் தொடுத்த இடமாதலால் இந்த இடத்திற்கு பாணாத்துறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரர் என்றும்,

    அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

    புராணத்தில் கூறப்படும் கோவில்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான கோவில் என்றும் சொல்லலாம்.

    உலக அழிவை, பிரளயத்தை இங்கு இருந்துதான் சிவபெருமான் தடுத்தார் என்பதால் உன்னதமான தலம்.

    இத்தலத்தில் மூன்று கால்கள் உடைய சிவபெருமானின் திரு உருவம் காணப்படுகிறது.

    பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவில்தான் காட்சியளிப்பார். இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.

    அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.

    சூரசேனனின் மனைவி காந்திமதியும் இங்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றான்.

    காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய வியாசருக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான்.

    பொய் உரைத்து நிறைய பாவத்தைப் பெற்ற நீங்கள், காசியில் இங்கு வந்து என்னை வணங்கினால் உங்கள் பாவம் கழியாது.

    எனவே கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று நீராடி அப்படியே பாணபுரீஸ்வரம் சென்று அங்கு எம்மை பூஜித்தால்

    யாம் அங்கு வந்து உமது சாபத்தை விமோசனம் செய்வோம் என்று சொன்னதால் வியாசபெருமான் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றார்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானை மானசீகமாக வழிபட்டால்,

    ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.

    பிரளயம் முடிந்து முதலில் தோன்றிய சிவன் கோவில் என்பதால் மற்ற எந்தக் கோவில்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், அந்தஸ்து இந்தக் கோவிலுக்கு அதிகமாகவே உண்டு.

    • இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.
    • அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.

    ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம்

    இறைவன் தானே அருள்பாலிக்கும் வகையில் கும்பகோணத்திற்குப் பக்கத்தில்

    காவிரி நதியின் தெற்கு பக்கத்தில் காளஹஸ்தீஸ்வரராக திருக்கோவில் கொண்டிருக்கிறார்.

    இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயு சேத்திரம் என்று அழைக்கப்படும்

    காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

    இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.

    யாருக்கு வெகு நாட்களாக கடுமையான ஜுரம் அடிக்கிறதோ என்ன மருந்து, மாத்திரை கொடுத்தாலும் நிற்கவில்லையோ,

    டாக்டர்களாலும் கைவிடப்பட்டாலும் பரவாயில்லை.

    அவர்களை சேர்ந்தவர்கள் இந்த சன்னதிக்கு வந்து சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசியால் சாதம் செய்து நிவேதனம் செய்து,

    மிளகு ரசம், பருப்புத் துவையல் மற்றும் ஜுரகேஸ்வரருக்கு நைவேத்தியமாகச் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து,

    அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.

    இது இன்று வரை நடக்கின்ற அதிசயம்.

    • முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது.
    • மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

    அற்புதமான சிவஸ்தலம்.

    அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.

    மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

    ஒரு சமயம் ஹேரண்ட முனிவர் காவிரியில் மூழ்கி இந்த தலத்தில் வெளியே வந்தார்.

    இன்னொரு சமயம் திருவலம் சுழியிலுள்ள காவிரி படுகைக்குள் இறங்கி, மறைந்து போனவர்,

    இந்த கோடீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்து நின்று தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

    இதற்கு அத்தாட்சியாக கொண்ட முனிவரின் திரு உருவம் இந்தத் திருக்கோவிலில் அமைந்திருக்கிறது.

    முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது.

    இறைவன் ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இருந்ததால் இந்த ஊருக்கு கொட்டையூர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சோழ மன்னன் ஒருவன் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியைக் கண்டு இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் என்று பெருமைப்பட்ட ஸ்தலம்.

    இதனால் இன்றைக்கு கோடீஸ்வரம் என்று பெயர் வழங்கி வருகிறது.

    ×