search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். (உள்படம்: அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி).

    பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம்

    • பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாளை ராஜ கோபாலசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டம்

    ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் 10- ம் திருநாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.

    இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி தேருக்கு எழுந்தருளினார். 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த குழுவினரால் அருளப் பாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

    தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    கோவிந்தா... கோபாலா... கோஷம்

    இதில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி மிக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×