search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi Pooja"

    • கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.
    • திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    பல்லடம்,

    பல்லடம் நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டதின் கீழ் பல்லடம் டெக்ஸ்டைல் தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூடுதல் சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் மந்தரகிரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், பல்லடம் அறம் அறக்கட்டளை பங்களிப்புடன் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் முருகன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் ராயர்பாளையம் நகராட்சி நடு நிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.

    திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜெமினி சண்முகம், மந்திரகிரி சிவக்குமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.
    கீழக்கரை::

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள போலீஸ் ஸ்டே‌ஷன் 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓராண்டாக அருகே உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அறையில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.

    இதையடுத்து புதிய கட்டிடம் கட்டக்கோரி பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய போலீஸ் ஸ்டே‌ஷன் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதற்கான பூமி பூஜையை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    கீழக்கரையை சேர்ந்த மக்கள் நலபாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம், மக்கள் டீம் அமைப்பு நிறுவனர் காதர் ஆகியோர் கூறுகையில், சேதமடைந்த கட்டிடத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்க உள்ளது. நடவடிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார். #tamilnews
    நல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
    வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்தே. வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்ச பூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.

    ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்பது ஜோதிட கணிப்பு. நல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

    எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட, வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.

    வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    1. உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.

    2. அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.

    3. சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.



    4. தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது நல்லது.

    5. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வியாழன், வெள்ளி, திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.

    பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வட கிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

    1. தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.

    2. மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வடகிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவது கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்துவிடக்கூடாது. 
    வாஸ்து முறைப்படி புது வீடுகட்ட ஆரம்பிக்கவும், அஸ்திவாரம் தோண்டவும் உகந்த நாட்களும், மாதங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் வீடுகட்டும் பணியை தொடங்கலாம். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வீடு கட்டுவதற்கு அடித்தளம் அமைப்பது நல்லது.

    அஸ்திவாரம் தோண்ட உகந்த நாட்கள்

    சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, தை மாதங்களில் குரு சுக்கிரன் ஆகிய இருவரும் அஸ்தமனம் இல்லாமல் இருக்க வேண்டும். மேற்படி நாளில் அசுவினி, ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் அமாவாசை பிரதமை, பவுர்ணமி இல்லாத நாட்களில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் அஸ்திவாரம் தோண்டும் பணியை தொடங்கலாம்.
    ×