search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ASUS"

    அசுஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Asus #ZenfoneLiteL1



    அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 என அழைக்கப்படுகிறது.

    சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், சென் யு.ஐ. சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் சென் யு.ஐ. 5.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5P லென்ஸ், PDAF, f/2.0
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
    - ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் சென் யு.ஐ. 5.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.0
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பண்டிகை கால சலுகையாக சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிளிப்கார்ட் இம்மாதம் நடத்த இருக்கும் ஃபெஸ்டிவல் தமாக்கா சேல் விற்பனையில் துவங்குகிறது.

    அறிமுக சலுகைகள்

    புதிய அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக், 50 ஜி.பி. கூடுதல் டேட்டா மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் முழுமையான மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனும் பிளிப்கார்ட் ஃபெஸ்டிவல் தமாக்கா சேல் விற்பனையில் துவங்குகிறது.

    அறிமுக சலுகைகள்

    புதிய அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக், 50 ஜி.பி. கூடுதல் டேட்டா மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் முழுமையான மொபைல் பாதுகாப்பு சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. #ASUS #smartphone



    அசுஸ் நிறுவனம் அக்டோபர் 17-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை அந்நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய சாதனம் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அசுஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அசுஸ் அறிமுகம் செய்த ஸ்டாக் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலான சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அடுத்த மாடலாக புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 லைட் மாடல்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இவை ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அசுஸ் சென்ஃபோன் ப்ரோ எம்2 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்கள் சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தன.



    இணையத்தில் லீக் ஆன இரண்டு அசுஸ் ஸ்மார்ட்போன்களும் ZB633KL மற்றும் ZB631KL மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

    எனினும் புதிய ஸ்மார்ட்போன்களில் முறையே 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என்றும், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு, மற்றும் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 18:9 ஃபுல் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கும் என்றும் இவை முந்தைய ஸ்மார்ட்போனை விட மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலில் 13 எம்.பி. மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் போன்றவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த காலகட்டத்தில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #ZenfoneMaxProM1 #smartphone



    அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், விற்பனை துவங்கிய சில மாதங்களில் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அசுஸ் அறிவித்துள்ளது.



    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.10,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS



    கேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.

    தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

    உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷனின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AsusZenfoneMaxProM1



    அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை ஜூலை 26-ம் தேதி நடைபெற இருப்பதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, 1.12μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 16 எம்பி பிரைமரி, 16 எம்பி செல்ஃபி கேமரா வெர்ஷன் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும்.

    இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #AsusZenfoneMaxProM1 #smartphone
    அசுஸ் நிறுவனத்தின் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் நிறுவனத்தன் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் வேரியன்ட் இன்டெல் கோர் i9 பிராசஸர் மற்றும் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 18.9மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் லேப்டாப் 1.86 கிலோ எடை கொண்டுள்ளது. 

    சென்புக் ப்ரோ 15 லேப்டாப் சிங்கிள் டீப் டைவ் புளு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும் புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    சென்புக் ப்ரோ 15 (UX550GD) சிறப்பம்சங்கள்:

    அசுஸ் சென்புக் ப்ரோ 15 விண்டோஸ் 10 ப்ரோ / விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளங்களில் கிடைக்கிறது. 15.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்சல் மற்றும் 4K 3840x2160 பிக்சல் பேனல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    புதிய அசுஸ் லேப்டாப் இன்டெல் கோர் i5-8300H / கோர் i7-8750H / கோர் i9-8950H பிராசஸ்ர்கள் மற்றும் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் கிராஃபிக்ஸ் அம்சங்களை என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050 GPU ( Nvidia GeForce GTX 1050 GPU) மற்றும் 4 ஜிபி ரேம் கவனித்து கொள்கிறது. 



    மெமரியை பொருத்த வரை 1000 ஜிபி/ 512 ஜிபி PCIe SSD மற்றும் 512 ஜிபி/ 256 ஜிபி SATA3 SSD-யுடன் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் ஃபுல்-சைஸ் பேக்லிட் கீபோர்டு மற்றும் 1.5மில்லிமீட்டர் கீ டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரெசிஷன் டச்பேடில் விண்டோஸ் ஹெல்லோ சப்போர்ட் கொண்ட கைரேகை சென்சார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    ஆடியோவை எதிர்பார்ப்போருக்கு சென்புக் ப்ரோ 15 மாடலில் சோனிக்மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம், மைக்ரோபோன் மற்றும் கார்டனா குரல் அங்கீகார வசதி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் பிரான்டிங் கொண்டுள்ளது. இ்துடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள விஜிஏ வெப்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்-ஐ சக்தியூட்ட 71Whr 8-செல் லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. 

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை அசுஸ் சென்புக் ப்ரோ 15 மாடலில் இரண்டு யுஎஸ்பி டைப் சி 3.1 ஜென் 2 (தன்டர்போல்ட்) போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி டைப் ஏ 3.1 ஜென் 2 போர்ட்கள், ஒரு ஹெச்டிஎம்ஐ, ஒரு காம்போ ஆடியோ ஜாக், ஒரு மைக்ரோ கார்டு ரீடர் உள்ளிட்டவையும் டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    ×