search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appreciation ceremony"

    • சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா அன்னப்பராஜா பள்ளியில் நடந்தது.
    • 10 நாள் பயிற்சி முகாமில் மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த தோல்பாவைக் கூத்திற்கான பொம்மை செய்தல் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் வெற்றிபெற்று தேசிய அளவில் நடந்த போட்டியிலும் கலந்துகொண்ட அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்து, ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் பெற்றார்.

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக அரசு நடத்தும் தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சம்பத்குமார் ராஜா, ராஜபாளையம் மணிமேகலை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற யுவராணி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சார்பில் நடந்த சைக்கிள் போட்டியில் 3-ம் பெற்ற மாணவர் ஹேமந்த்சிவா, தேசிய மாணவர் படை சார்பில் மதுரையில் நடந்த 10 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், இளையபெருமாள் ஆகியோரும் மாணவ-மாணவிகளை பாராட்டி பேசினர்.

    • கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
    • கழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை பகுதியில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பு இடம் பெற்ற மாணவர்களை முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோமாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி 10,12ம் வகுப்புபொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்மேலாளராக பணியாற்றிய கணேசன் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன். இவரின் பணி ஓய்வு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் நியூஸ் ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், வளவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன்மற்றும் பலர் ஓய்வு பெற்ற மேலாளர் கணேசனுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருச்சி தமிழ்ச்சங்கம், திருச்சி அறிவாளர் பேரவை மற்றும் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் வருகிற 10-ந்தேதி அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது
    • திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் வை.ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்

    திருச்சி:

    திருச்சி தமிழ்ச்சங்கம், திருச்சி அறிவாளர் பேரவை மற்றும் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் பத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மேலரண் சாலையில் உள்ள தமிழ்ச்சங்க மன்றத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவில் திருச்சி அறிவாளர் பேரவை ஆேலாசகர் முனைவர் செ.அசோகன் வரவேற்கிறார்.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி விருதாளர்களான பத்மஸ்ரீ டாக்டர் ஏ.கே.சி.நடராஜன், பத்மஸ்ரீ டாக்டர் மா.சுப்புராமன், பத்மஸ்ரீ சே.தாமோதரன், பத்மஸ்ரீ மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ காலிஷாபீ மெகபூப் ஆகியோரை பாராட்டி வாழ்த்துரை வழங்குகிறார்.

    திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி அறிவாளர் பேரவை தலைவர் பேராசிரியர் முனைவர் க.திலகவதி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் வை.ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழா நிறைவில் திருச்சி அறிவாளர் பேரவை பொதுச் செயலாளர் கவிஞர் வீ.கோவிந்தசாமி நன்றி கூறுகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த தகவலை செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    • நீலகிரி அறக்கட்டளை சார்பில் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் பங்கேற்றார்.

    அரவேணு:

    நமது நீலகிரி அறக்கட்டளை சார்பில் கோத்தகிரி பேரூராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு அறக்கட்டளையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி வரவேற்றார். சோழா மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் பங்கேற்றார்.

    விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆல்வின், சுகுணா சிவா, முருகன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத் போஜன் மற்றும் வார்டு உறுப்பினர் சுப்ரமணி மனோஜ், மோனிஷா, பிரியா பாலன், ஜெகதீஸ்வரன், மல்லிகா ரவி, பிரபுதாஸ் கற்பகம், அமுதம் பாபு, காவேரி, ராஜேஸ்வரி, வெஸ்லி, லோகநாதன், சகுந்தலா காளிதாஸ், தாமோதரன், கணபதி, முகமது ஜாபர், செல்வராணி, பூமணி, ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகள் ரெப்கோ வங்கி சேர்மேன் தங்கராஜ், வங்கி இயக்குனர் பிரதிநிதிகள் ஞானபிரகாஷ், கலைச்செல்வன், சுப்பிரமணியம், லோகநாதன், கிருஷ்ணன், பாரதியார், கணேசன், ராஜா, மதிவாணன் ,ரமேஷ்குமார் பி எஸ் குமார், ஏ முருகேஷ் ஆகியோருக்கு பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

    ×