என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் பணி ஒய்வு பாராட்டு விழா
- கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்மேலாளராக பணியாற்றிய கணேசன் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன். இவரின் பணி ஓய்வு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் நியூஸ் ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், வளவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன்மற்றும் பலர் ஓய்வு பெற்ற மேலாளர் கணேசனுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






