search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apply"

    • வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை.
    • கிராமம்தோறும் இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக 2016 முதல் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை. அதற்காக தொலைதூரத்தில் இருக்கும் இ-சேவை மையம் சென்றுவருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு இ-சேவை மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

    மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், கிராமம்தோறும், இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
    • இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகள் மாணவர் விடுதி 22, மாணவியர் விடுதி 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 4 இணை சீருடைத்துணிகள் தைத்து வழங்கப்படும்.

    அரசாணைப்படி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10சதவீதம்), பிற வகுப்பி னர்கள் (5சதவீதம்) என்ற விகிதத்தில் புதிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    மாணவர்கள் விடுதியில் சேர அவர்களது பெற்றோர், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

    மேற்படி நிபந்தனை மாணவிக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாண வர்கள் இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை யாசிரியர் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு EMIS எண் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

    விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் புகைப்படம், சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விண்ணப் பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளினி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகளுக்கு என 21 மாணவர் பள்ளி விடுதிகளும், 14 மாணவி பள்ளி விடுதிகளும், 5 மாணவர்கள் கல்லூரி , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியு டையவர்கள் ஆவார்கள்.

    அனைத்து விடுதி மாணவர், மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்ததொலைவு விதி மாணவிகளுக்கு பொ ருந்தாது.

    தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பா ளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளி னியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    • அரியலூர், ஆண்டிமடம் ஐ.டி.ஐ.-யில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • வருகின்ற 7-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்திட வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஆண்டிமடம் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மற்றும் ஆண்டிமடம் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிப் பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வருகின்ற 7-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்திட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும் விவரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055877, 04329-228408, ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055879 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    2022-23ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாகசெயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டாரஅளவிலான கூட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில்உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதிஅளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை (நிலை) எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    மணிமேகலை விருது தேர்வுக்கான மதிப்பீட்டு காரணிகள் பின்வருமாறு :- வார மற்றும் மாதாந்திர கூட்டங்களை முறையாக நடத்தியிருக்க வேண்டும். குழுவில் சேமிக்கப்படும் சேமிப்புத்தொகையினை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.குழுக்கள் / கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களுக்கும்வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பொருளாதார நடவடிக்கைகளில்ஈடுபட்டிருக்க வேண்டும்.திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பயிற்சிகள்அனைத்து உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும்.

    சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள்முடித்த சுய உதவிக்குழுக்கள், தர மதிப்பீட்டில் ஏ அல்லது பி தகுதி உள்ள பஞ்சாயத்துஅளவிலான கூட்டமைப்பு, ஏ அல்லது பி தகுதி உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஏ அல்லது பி தகுதி உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில்தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள் முடித்த சுய உதவிக் குழுக்கள், ஏ அல்லது பி தகுதி உள்ள பகுதிஅளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு ஆண்டு நிறைவு செய்த நகர அளவிலானகூட்டமைப்பு ஆகிய மக்கள் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இவ்விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிகளில் தகுதியான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட பேரூராட்சி-நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும் தொடர்புக்கு - உதவி திட்ட அலுவலர் (கூடுகை மற்றும் கூட்டாண்மை),அறை எண்.305 மூன்றாவது தளம், மகளிர் திட்ட அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியையும் 9444094396, 8825552321, 0421-2971149 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டது
    • ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-II ஐ சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர்.

    ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிபெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1-ன் மனிதவளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு-II-ன் கால அலுவலகத்திலும் பெற்று. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திேலயே 15.06.2023 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2023-2024 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பஸ்களில் இலவச பயண சலுகை பெறலாம்.

    பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலும், தொலைபேசி எண் 04328-275466 மற்றும் கைபேசி எண் 8072519559 ஆகிய எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தினத்தையொட்டி சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் வருகிற 15.8.2023 நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதியுடைய தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 10.6.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகைய தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாப்செட்கோ) கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.பொது கால கடன் திட்டம் அல்லது தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் (கிரேடிங்) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள், அனுமதிக்கப்படுவார்கள்.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்று கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.

    கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மேற்காணும் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார்.

    இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3¾ லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.co என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் ஆர்.டி.ஓ. வளாகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×