search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mobile shop"

    • திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ரூ.10 ஆயிரத்திற்கு செல்போன் ஒன்றை அவரது மனைவி மல்லிகா பெயரில் வாங்கியுள்ளார்.
    • சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    வெள்ளகோவில் :

    சிவகங்கை மாவட்டம், காட்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் வீரராஜா (வயது 34). இவர் தனது மனைவியுடன் வெள்ளகோவில், காந்தி நகர் பகுதியில் குடியிருந்து கொண்டு முத்தூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார்.

    செல்போன் கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முத்தூர் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40) என்பவர் ரூ.10 ஆயிரத்திற்கு செல்போன் ஒன்றை அவரது மனைவி மல்லிகா பெயரில் வாங்கியுள்ளார்.

    வாங்கிய செல்போன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதை மாற்றி கொடுக்குமாறு செல்போன் கடையில் வேலை செய்யும் வீரராஜாவிடம் போன் மூலம் கேட்டுள்ளார், அதற்கு வீரராஜா நேரில் வந்து கடை ஓனரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் முத்தூர் செல்போன் கடைக்கு வந்து வீரராஜாவிடம் செல்போனை மாற்றி கொடுக்க வேண்டுமாறு அன்பழகன் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதில் அன்பழகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரராஜா வயிற்றில் குத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    காயமடைந்த வீரராஜா தற்போது கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • திண்டுக்கல் அருகே செல்போன் கடையை உடைத்து பணம் மற்றும் செல்உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையரை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி

    திண்டுக்கல் அருகில் உள்ள அஞ்சுகுழிபட்டி காவேரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). இவர் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்போன்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்க ம்போல் வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடை யின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே ெசன்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், 12 பேட்டரிகள் திருடு போயிருந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.

    காசிமேட்டில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    காசிமேடு, திடீர்நகரை சேர்ந்தவர் சலீம்பாஷா. அதே பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார். இன்று காலை கடையை திறக்க சென்றபோது ‌ஷட்டர் உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.42 ஆயிரத்தை காணவில்லை. மர்மபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. #tamilnews
    ×