என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் அருகே செல்போன் கடையை உடைத்து திருட்டு
- திண்டுக்கல் அருகே செல்போன் கடையை உடைத்து பணம் மற்றும் செல்உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
- சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையரை தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி
திண்டுக்கல் அருகில் உள்ள அஞ்சுகுழிபட்டி காவேரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). இவர் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்போன்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்க ம்போல் வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடை யின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே ெசன்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், 12 பேட்டரிகள் திருடு போயிருந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
Next Story






