search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anushka Sharma"

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா, நெசவாளர்களுக்காக நாடு முழுவதும் பயணிக்க இருக்கிறார். #AnushkaSharma
    அனுஷ்கா சர்மா விராட் கோலியை திருமணம் செய்த பிறகும் இந்தி சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார். வருண் தவானுடன் அனுஷ்கா நடித்து இருக்கும் சுய்தாகா மேட் இன் இந்தியா என்ற படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ‌ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். நெசவாளர்கள் பற்றிய படம் என்பதால் தேசிய கைத்தறி தினமான வரும் 7-ம் தேதி முதல் விளம்பர பணிகளை தொடங்க உள்ளனர்.



    இதற்காக நாடு முழுக்க வருண், அனுஷ்கா ஜோடி பயணிக்க உள்ளனர். தயாரிப்பாளர் மனீஷ் சர்மா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கைப் படமான ‘சஞ்சு’ படத்தில் பெண்களை தவறாக சித்தரித்திருப்பதாக, படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Sanju #RanbirKapoor
    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பையில் நேற்று நடிகர்-நடிகைகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

    சஞ்சய் தத்துக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள், போதை பழக்கத்துக்கு அவர் அடிமையானது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தது என்று அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதில் சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

    சிறைச்சாலையை தவறாக சித்தரித்து இருப்பதாக தணிக்கை குழுவில் மனு அளிக்கப்பட்டது. இப்போது படத்தில் இன்னொரு சர்ச்சை காட்சி இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும் அவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாகவும் காட்சி வைத்துள்ளனர்.



    மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350-க்கும் மேற்பட்ட காதலிகள் அவருக்கு இருந்ததாக படத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளனர்.

    எனவே படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார். #Sanju #RanbirKapoor #AnushkaSharma

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. #AnushkaSharma
    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.

    சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரிலேயே விரட்டிச்சென்று கண்டித்து கணவர் மூலம் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டார்.

    இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இவருக்கு இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்துக்கு இணையாக பட வாய்ப்புகள் குவிகின்றன.



    ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். விளம்பரங்களிலும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.

    மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. #AnushkaSharma

    குப்பை கொட்டும் நபரை அனுஷ்கா சர்மா திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபர் தற்போது கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதல் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தனர். அதில் காரில் வந்து குப்பை கொட்டிய இளைஞர் ஒருவரை அனுஷ்கா திட்டுவதாக காட்சி இருந்தது. அவரிடம் ‘‘ஏன் இப்படி குப்பை கொட்டுகிறீர்கள்’’ என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.

    இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களை பாராட்டினர். இதற்கிடையே, இந்த வீடியோவால் அவர் களுக்கு சிக்கல் 
    ஏற்பட்டுள்ளது. வீடியோவில் அனுஷ்கா திட்டிய வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன் அர்ஹான் சிங் என்று தெரியவந்தது.

    அந்த வீடியோவை பார்த்த அர்ஹான் சிங் கோபம் அடைந்தார். தன்னை அனுஷ்கா திட்டும் காட்சியை வெளியிட்டு அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் தன்னை இருவரும் அவமானப்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.

    இதுபற்றி அர்ஹான் சிங் கூறுகையில், ‘‘என்னைப் பற்றி கோலியும் அனுஷ்காவும் சமூக வலைதளம் மூலமாக பொதுவில் அவமானப் படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். கோர்ட்டு தான் இதில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.
    தெருவில் குப்பை போடுவதை கண்டித்து கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோவும் அவரது எதிர்பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #AnushkaSharma
    மும்பை:

    மும்பை தெருவில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசுவதை தனது கணவர் கோலியுடன் வேறொரு காரில் செல்லும் அனுஷ்கா சர்மா பார்த்து விடுகிறார்.

    குப்பை வீசிய நபரை கண்டிக்கும் வகையில் திட்டும் அனுஷ்கா, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்துகிறார். இந்த காட்சிகளை அவரது கணவர் விராட் கோலி வீடியோவாக படம் பிடித்து, அந்த 17 வினாடி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தனது மனைவியின் சமூக உணர்வையும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    இந்த பதிவு வெளியானதும் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார். அர்ஹான் சிங் என்னும் அந்நபர் இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    நான் காரில் இருந்து அந்த குப்பையை வேண்டுமென்று தெரிந்தே சாலையில் வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் சாலையில் போகும் வழிப்போக்கர்களைப்போல் அனுஷ்கா சர்மா என்னை அநாகரிகமாக திட்டியதை அருகில் இருந்து படம் பிடித்த விராட் கோலி இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    எனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையைவிட விராட் கோலி காரில் இருந்து வந்த அனுஷ்காவின் வசைமொழியும், இதை வீடியோ பதிவாக வெளியிட்ட விராட் கோலியின் செயலும் படுகுப்பையாக உள்ளது என அர்ஹான் சிங் குறிப்பிட்டுள்ளார். #AnushkaSharma #Garbage #viral

    https://twitter.com/imVkohli/status/1007952358310055937
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி மற்றும் நடிகையான அனுஷ்கா சர்மா உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். #AnushkaSharma #ViratKohli

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் தற்போது பெங்களூருவில் அடுத்த தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    கிரிக்கெட்டில் எப்போதும் பிசியாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களின் துறையில் பிசியாக இருந்த போதும், தங்களின் வாழ்க்கைகாகவும் நேரம் செலவிட தவறுவதில்லை. 



    இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த வீடியோவில், என்னைவிட அனுஷ்கா நன்றாக உடற்பயிற்சி செய்வார் என கூறியுள்ளார். மேலும் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகச்சிறப்பானது, என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். #AnushkaSharma #ViratKohli
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னைவிட மனைவி அனுஷ்கா சர்மாவிடம் தான் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளது என கூறியுள்ளார். #ViratKohli #AnushkaSharma

    இந்திய அணியின் கேப்டனும், முண்ணனி பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் வீட்டில் எப்படி என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். 

    அதில், என் வாழ்க்கையில் அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது. என்னுடைய வெற்றி, தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் இருந்துள்ளார். பல வேலைகள் இருந்தாலும் மைதானத்திற்கு நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என அனுஷ்கா எனக்காக ஏராளமானவற்றை செய்துள்ளார்.



    என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். என்னைவிட அவர் தான் சரியான முடிவை எடுப்பார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும். அனுஷ்கா தான் என்னுடைய பலமே, என கோலி கூறியுள்ளார். #ViratKohli #AnushkaSharma
    ×