search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annathanam"

    • மேல்மலையனூர் அருகே ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் பழமையான ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை தனபூஜை, யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்பு யாகசாலையிலிருந்து கடம்புறப்பட்டு கோவிலை வலம் வந்தவுடன் கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
    • 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் தர்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப்படித்தால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் அவர் இதுபோலநபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கூறி கொள்கிறேன்.

    20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள்குழு அமைத்து உரிய நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 900 ஆடுகள், 2000 கோழிகளை பலியிட்டு விடிய விடிய அன்னதானம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சங்கங்கள், வெளியூர் பிரமுகர்கள் ஆகியோர் செபஸ்தியாருக்கு ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    அவ்வாறு மக்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரம் கோழிகள், 900 ஆடுகள், 130 மூடை அரிசிகள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று மதியம் உணவு சமைக்கப்பட்டது.

    மாலையில் தேவாலயத்தில் புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜைக்கு பிறகு சமபந்தி விருந்து தொடங்கியது. மாலையில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல் நகரில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவு அருந்தினர். மேலும் தங்கள் வீடுகளுக்கும், உணவினை வாங்கிச் சென்றனர்.

    சமையல் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டதுடன் செபஸ்தியாரையும் வழிபட்டுச் சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கையில், புனித செபஸ்தியாருக்கு தங்கள் குறைகள் மற்றும் வேண்டுதல் குறித்து பக்தர்கள் மன்றாடினால் அது நிச்சயம் நிறைவேறும். அவ்வாறு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தி யாருக்கு பக்தர்கள் அடுத்த ஆண்டு திருவிழாவின் போது தங்களால் இயன்ற காணிக்கையை வழங்குவர். அவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களை கொண்டே உணவு தயாரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

    ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் அளவு அதிகரித்து வருவதில் இருந்தே இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    ×