search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yakshala Puja"

    • மேல்மலையனூர் அருகே ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் பழமையான ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை தனபூஜை, யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்பு யாகசாலையிலிருந்து கடம்புறப்பட்டு கோவிலை வலம் வந்தவுடன் கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×