search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angalan MLA"

    • திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடைகோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடை- கோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அங்காளன் எம்.எல்.ஏ. பங்கேற்று சுமார் 189 - கால்நடைகளான மாடுகள் ,கோழிகள், ஆடுகள், கன்றுகள் , வான்கோழி ஆகிய கால்நடைகளுக்கு முதல் 3 பரிசுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வா தாரமாக விளங்குகின்றது. குறிப்பாக கால்நடைகளை வளர்க்கின்ற விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் துறையின் இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் குமரன், மதகடிப்பட்டு கால்நடை மருத்துவர் செங்கேணி மற்றும் கால்நடை பரிசளிப்பு விழாவின் நடுவர்களாக டாக்டர் பிரீத்தா, டாக்டர் ராஜா மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தை சுற்றி புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கெஜலட்சுமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் வச்சலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
    • பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன், 2018-ல் வேளாண்துறையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைபூண்டு வழங்க கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளியில் குறைந்த விலை நிர்ணயித்த நிறுவனத்தின் பெயர், விபரம் என்ன? கொள்முதல் விலை, விற்பனை விலை என்ன? தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், 2018-ம் ஆண்டு 20 மெட்ரிக் டன் விவசாயிகளுக்கு வழங்க தனியார் நிறுவனத்திடம் தக்கை பூண்டு கொள்முதல் செய்யப் பட்டது. கொள்முதல் விலை ரூ.51.30, விற்பனை விலை ரூ.53.90. தமிழக அரசின் கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.

    இதில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றார். மீண்டும் குறுக்கிட்ட எம்.எல்.ஏ. அங்காளன், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய காரணம் யார்? அவர்கள் மீது அரசு ந டவடிக்கை எடுத்ததா? இதுதொடர்பான கோப்புகள் அனைத்தையும் சபாநாயகர் அறையில் வைக்க வேண்டும். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .
    • இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் திருபுவனை ரைஸ் மில் முதல் சன்னியாசிக்குப்பம் வரையிலான தார் சாலையை புதுப்பிக்க சுமார் 1.67 கி.மீ. நீளமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் அச்சாலையை புதுப்பிப்பதற்காக புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

    இதில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் போது புதுவை அரசு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை சின்ன பேட் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாமல் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் வடிகால் வாய்கால் அமைக்க அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    உடனடியாக புதுவை பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது. இந்நிலையில் இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
    • நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

    இந்நிகழ்ச்சியையொட்டி மதகடிப்பட்டு பாரத தேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கான பல்வேறு அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்க ளுக்கு நேரில்செ ன்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் மதகடிப்பட்டு பகுதியும் அடங்கும். இந்த சாலை அருகில்தான் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்ல முடியும்.

    தற்பொழுது சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாதவாறு பள்ளங்களை தோண்டினர்.

    கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தில் பணி செய்யாமல் தொழிலாளர்கள் விட்டு விட்டனர். இதனால் சட்டமன்ற அலுவலகத்திற்கு வர முடியாமல் அங்காளன் எம்.எல்.ஏ. தவித்து வருகிறார்.

    இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு நேரில்சென்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.

    ஆனாலும் பொதுமக்கள் எம்.எல்.ஏ.வை சிரமம் இன்றி பார்ப்பதற்கும் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கும் வழிவகை இல்லாமல் தற்போது உள்ளனர்.

    இதனை சுட்டிக்காட்டிய அங்காளன் எம்.எல்.ஏ. சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் தனது அலுவலகத்திற்கு செல்லும் வகையில் உடனடியாக சாலை பணியை முடித்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இன்றுவரை அப்பணி சரி செய்யப்படா மலே உள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அந்தப்

    பகுதியில் சாலை வசதி செய்து மக்கள் சிரமம் இன்றி சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
    • இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    எனவே சேதுமடைந்த சாலையினை சரி செய்வதற்காக காலமுறை புதுப்பிக்கும் பணியினை செய்திட மார்க்கிங் பெயிண்ட் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜையினை திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 2-ம் தவணையாக 28 பேருக்கு 1 லட்சத்து 60 ஆயிரம், 3-ம் தவணையாக 17 பேருக்கு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் வீதம் என மொத்தம் 54 பேர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தவணைத் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    தொழில் சார்ந்த கல்விக்கான புதிய பாடங்களான இயந்திரவியல், தையல் பிரிவு புதிய வகுப்புகளாக சேர்க்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழில் கல்வி ஆசிரியர்கள் வீரா குமார் வைஷ்ணவி மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
    • போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.

    இதனிடையே சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அவர் 12.30 மணிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளனை அழைத்து பேசினார். அப்போது அங்காளன், தனது தொகுதியில் பரிந்துரை இல்லாமல் போடப்பட்ட அனைத்து கமிட்டிகளையும் கலைக்க வேண்டும்.

    புதிதாக தனது பரிந்துரையின்படி கமிட்டிகளை போட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கவர்னர், முதல்-அமைச்சரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். முடிவு தெரியும்வரை நான் போராட்டத்தை தொடர்வேன் என்று கூறிய சுயேச்சை

    எம்.எல்.ஏ. அங்காளன் மீண்டும் சட்டசபை வளாக நுழைவுவாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    அவருடன் இருந்த நிர்வாகிகளை அமரவேண்டாம் என கூறி அங்களான் எம்.எல்.ஏ. தனியாக அமர்ந்தார்.

    சபாநாயகருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழைக்காலங்க–ளில் தேங்கி நிற்கும் மழை நீர் ஆகியவை சாலையிலேயே நின்று பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

    இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை மூலம் 19.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப் பகுதியில் யூ மற்றும் எல் வடிவிலான வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும்பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×