என் மலர்
புதுச்சேரி

புதிய வகுப்பறை கட்டிடத்தை அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
புதிய வகுப்பறை கட்டிடங்கள்-அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
தொழில் சார்ந்த கல்விக்கான புதிய பாடங்களான இயந்திரவியல், தையல் பிரிவு புதிய வகுப்புகளாக சேர்க்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழில் கல்வி ஆசிரியர்கள் வீரா குமார் வைஷ்ணவி மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






