என் மலர்
புதுச்சேரி

ஓவிய போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அங்காளன் எம்.எல்.ஏ. உபகரணங்கள் வழங்கினார்.
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
- நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
இந்நிகழ்ச்சியையொட்டி மதகடிப்பட்டு பாரத தேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கான பல்வேறு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






