என் மலர்
புதுச்சேரி

கழிவுநீர் வாய்கால் அமைக்க பணியை அங்காளன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
கழிவுநீர் வாய்கால் அமைக்க பூமி பூஜை-அங்காளன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்
- பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது.
- இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
திருபுவனை சின்ன பேட் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாமல் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் வடிகால் வாய்கால் அமைக்க அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
உடனடியாக புதுவை பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது. இந்நிலையில் இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






