என் மலர்
புதுச்சேரி

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட அங்களான் எம்.எல்.ஏ.விடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
அங்காளன் எம்.எல்.ஏ.வுடன் சபாநாயகர் சமாதான பேச்சுவார்த்தை
- புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
- போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் அமர்ந்து தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
போராட்டத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். ½ மணி நேரம் அவருடன் அமர்ந்திருந்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.
இதனிடையே சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அவர் 12.30 மணிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளனை அழைத்து பேசினார். அப்போது அங்காளன், தனது தொகுதியில் பரிந்துரை இல்லாமல் போடப்பட்ட அனைத்து கமிட்டிகளையும் கலைக்க வேண்டும்.
புதிதாக தனது பரிந்துரையின்படி கமிட்டிகளை போட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கவர்னர், முதல்-அமைச்சரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். முடிவு தெரியும்வரை நான் போராட்டத்தை தொடர்வேன் என்று கூறிய சுயேச்சை
எம்.எல்.ஏ. அங்காளன் மீண்டும் சட்டசபை வளாக நுழைவுவாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
அவருடன் இருந்த நிர்வாகிகளை அமரவேண்டாம் என கூறி அங்களான் எம்.எல்.ஏ. தனியாக அமர்ந்தார்.
சபாநாயகருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.






