search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbil mahesh poyyamozhi"

    • அமைதியான பூமியை வடிவமைக்க தியானம் மிக அவசியம்.
    • அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான்.

    பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சேகர்பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாக இருந்தாலும் சரி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, பிரம்ம குமாரிகள் ராக்கி கயிறு கட்ட வந்தால் முதலில் அவர்களை வரச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக உங்களின் எண்ணங்கள் என்பது அமைதியான ஒரு மனிதம் வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான். எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னார்.  


    மனஅழுத்தம் இல்லாத அமைதியான பூமியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தியானம் மிக அவசியம். நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருக்கிறோம். அடக்கப்பட்ட மனம்தான் நமக்கு நண்பனாக இருப்பான்.

    அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். எங்களுடைய திராவிட மாடல் புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது இதுதான். நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். 

    திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.

    அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்தி குமார், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ருத்ர கோட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நவல்பட்டு ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்து உய்யகொண்டான் கரை வழியாக திருவெறும்பூர் வரை தினசரி வந்து செல்வதற்கு பயன்படுத்தி வரும் சாலை, மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

    இதையடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம்  கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கலெக்டர் ராசாமணியை சந்தித்து மனு கொடுத்தார். 

    அதில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக  கலெக்டருக்கு அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
    ×