search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admission of students"

    • அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை: 

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டேராடுனில் உள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரும் 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டேராடுனில் உள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். (நேர்முகத் தேர்வு) பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்குவருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    சோளிங்கர்

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.

    முதல் நாள் சிறப்பு பிரிவினர்களுக்கு மட்டும் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.எஸ்.சி கணினி அறிவியல் (கட் ஆப் மதிப்பெண் 400-ல் இருந்து 248 வரை), 12-ந் தேதி கணிதம் (கட் ஆப் 400 -ல் இருந்து 173 வரை) 16-ந் தேதி பி.காம் வணிகவியல் (கட் ஆப் 400-ல் இருந்து 231 வரை) 17-ந் தேதி பி. ஏ ஆங்கிலம் (கட் ஆப் 100 -ல் இருந்து 54),18-ந் தேதி பி.ஏ தமிழ் (கட் ஆப் 100 -ல் இருந்து 70 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் அசல் மற்றும் 5 நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் .சேர்க்கை பெற்ற மாணவர்கள் அன்றே சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    • விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது.

    மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

    இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களைக்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்விண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×