search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை சைனிக் பள்ளி"

    • மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது உடுமலை சைனிக் பள்ளி.
    • முதல்வராக பதவியேற்ற கேப்டன் கே.மணிகண்டனுக்கு 11-ம்வகுப்பு கேடட்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    உடுமலை:

    இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணையை பின்னணியாகக் கொண்டு உடுமலை சைனிக் பள்ளி அமைந்து உள்ளது.மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாகி பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்தப் பள்ளியின் புதிய முதல்வராக கேப்டன் கே.மணிகண்டன் பொறுப்பேற்றார்.

    சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் 2005 -ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தார். 2010 ல் லாங் என்.டி படிப்பையும், 2017-ல் வெல்லிங்டனில் பட்டமும் பெற்றார்.மணிகண்டன் இதற்கு முன்பு சில்காவில் கல்வி அதிகாரியாகவும் வெலிங்டன் மற்றும் இந்திய கடற்படை அகாடமி அதிகா ரியாகவும் பணியாற்றி உள்ளார். முதல்வராக பதவியேற்ற கேப்டன் கே.மணிகண்டனுக்கு 11-ம்வகுப்பு கேடட்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    • அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை: 

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×