search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "well water"

    • எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
    • இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மனப்பாடு கிராமம் இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர், இவர்க ளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்திட்டம், திருச்செந்தூர் எல்லப்பன் நாயக்கன் குளத்து தண்ணீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் பொது குடிநீர்குழாய், வீட்டு இணைப்பு ஆகியன பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இருந்தாலும் மணப்பாடு கிராம மக்கள் குடிப்பதற்கு,சமையல் செய்வதற்கும் கிணற்று நீரையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். மணப்பாடு கடற்கரையில் கல்லும் மணலும் சேர்ந்து இயற்கையாக சுமார் 60 அடி உயரத்தில் உருவான மணல் குன்றின் மீது திருச்சிலுவைநாதர் ஆலயம்,ஆலயத்திற்கு பின்புறம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடல் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு அருகில் கடல் ஊடுருவலை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுர காமிமரா உள்ளது., பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த புனித சவேரியார், கடற்கரை அருகில் குடிதண்ணீருக்காக நாழிக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதாகவும், அதனால் கடற்கரையை சுற்றியுள்ள கிணறுகளில் சுவையான குடிநீர் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இவர்கள் கூறும் போது எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு. இதனால் எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் குடிப்பதற்கும், சமையலுக்கும் இந்த தண்ணிரை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு. எங்கள் ஊர் மீன் விற்பனை செய்யும் போது மணப்பாடு மீன் என்று சொல்லி விற்பனை செய்வார்கள் என்று கூறினர்.

    • கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
    • அதேபகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    வெள்ளகோவில்,ஜன.19-

    வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரில் விஷம் கலந்துள்ளதாக வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    இந்நிலையில் கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனா்.

    • திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது.
    • கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரில் விஷம் கலந்துள்ளதாக வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனா்.

    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    ×