search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvananthapuram Airport"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

    கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    விமான பயணிகள் சர்வதேச அளவில் ஷார்ஜாவுக்கும், உள்நாட்டில் பெங்களூரூவுக்கும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா 23-ந்தேதி நடக்க இருக்கிறது
    • வருடத்திற்கு இரண்டு முறை குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவை நிறுத்தப்படும்

    இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின்போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும். விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும்.

    விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுகிறது.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் பிடிபட்டது.
    திருவனந்தபுரம்:

    வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



    இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    ×