என் மலர்

  செய்திகள்

  திருவனந்தபுரத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது
  X

  திருவனந்தபுரத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் பிடிபட்டது.
  திருவனந்தபுரம்:

  வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

  சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×