பயணிகள் வருகை-சேவை அதிகரிப்பு: திருவனந்தபுரம் விமான நிலையம் புதிய சாதனை

கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன.
பயணிகள் வருகை-சேவை அதிகரிப்பு: திருவனந்தபுரம் விமான நிலையம் புதிய சாதனை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

விமான பயணிகள் சர்வதேச அளவில் ஷார்ஜாவுக்கும், உள்நாட்டில் பெங்களூரூவுக்கும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com