search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refusing"

    திருக்கனூரில் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திருக்கனூரில் உள்ள தனியார் மதுகடைக்கு மதுகுடிக்க சென்றார். பின்னர் மது குடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா (33) என்பவர் செல்வராஜை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். ஆனால், செல்வராஜ் பணம் கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து ராஜா பணம் கேட்டு ரகளை செய்யவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ் ராஜாவை தாக்கினார்.

    இதனால் ஆவேசம் அடைந்த ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த செல்வராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    காதலித்த மாணவியை திருமணம் செய்ய மறுத்த டிரைவர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சிதம்பராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தனக்குமார் (வயது24). இவர் ஜே.சி.பி. டிரைவராக உள்ளார்.

    மாலதி கல்லூரிக்கு செல்லும் போது சந்தனக்குமார் அடிக்கடி பார்த்து பேசி வந்தார். அப்போது அவர்களிடையே காதல் ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். தனிமையிலும் சந்தித்து பேசி வந்தார்கள்.

    இந்த நிலையில் சந்தனக்குமாருக்கு அவரது வீட்டில் பெண் பார்த்தனர். இதை அறிந்த மாலதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தனக்குமாரிடம் வலியுறுத்தினார். அதற்கு சந்தனக்குமார் மறுத்து விட்டாராம்.

    இதுபற்றி மாலதி தரப்பில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்தனர்.

    ×