search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redressal Forum"

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

    செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் பூவேஸ் ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராம மக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அதிகாரியிடம் குற்றம் சாட்டினர்.

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்தார்.

    • மதுரை வடக்கு கோட்டத்தில் வருகிற 3-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செய ற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஸ்கோர்ஸ் சாலை மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நு கர்வோர்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் நாளை (6-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் பங்கேற்று மின் விநியோக குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் 27-ந் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் கம்பெனி நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    • ராமநாதபுரத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
    • இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடனை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடனான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அசோசியேசன் எரிவாயு நுகர்வோர்கள், ரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இதில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×