எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது.பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை 

மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அசோசியேசன் எரிவாயு நுகர்வோர்கள், ரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com