எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடனை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடனான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com