மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை வடக்கு கோட்டத்தில் வருகிற 3-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செய ற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஸ்கோர்ஸ் சாலை மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நு கர்வோர்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com