search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram gopal varma"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் கட்சியினர் பிலிம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.


    வியூகம் போஸ்டர்

    இதுகுறித்து தெலுங்கானா திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறுகையில் சினிமாவை பொழுதுப்போக்காக பார்க்க வேண்டும். சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கி அனுமதி அளித்த பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.


    • பல்வேறு ஊடக விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்தனர்
    • விமர்சகர்கள், அனிமல் இயக்குனரிடம் திரைப்பட வகுப்பு பயில வேண்டும் என்றார் ஆர்ஜிவி

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தி திரைப்படம் "அனிமல்" உலகமெங்கும் வெளியானது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெள்ளித்திரையில் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

    ஆனால், "அனிமல்" திரைப்படத்தை எழுத்து, சமூக, காட்சி உள்ளிட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல பிரபல விமர்சகர்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஏராளமாக வன்முறை சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தரமான திரைப்படமல்ல என்றும் குறை கூறி இயக்குனரை விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில், "அனிமல்" திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக போகும் புதிய திரைப்படங்கள் "அனிமல்" வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், அதற்குள் இப்படம் மேலும் பல கோடிகள் வசூலில் குவிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இப்பின்னணியில் "ஆர்ஜிவி" என அழைக்கப்படும் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma), திரைப்பட விமர்சகர்களை கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.

    விமர்சகர்களுக்கு 5 அறிவுரைகளாக ஆர்ஜிவி தெரிவித்திருப்பதாவது:

    • இயக்குனரை காட்டிலும் படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்கள் மீது விமர்சகர்கள் முதல்முறையாக கோபமடைந்திருக்கிறார்கள்.
    • படு மோசம் என வர்ணிக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இதன் மூலம் விமர்சகர்களின் திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதியாகி விட்டது.
    • ரசிகர்களுக்கு விருப்பமானது எது என விமர்சகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.
    • அனைத்து விமர்சகர்களும் கை கூப்பி திரைப்படங்களை வர்ணிப்பது எப்படி என சந்தீப் ரெட்டி வங்காவிடம் கேட்டு கற்று கொள்ள வேண்டும்.
    • விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை பல முறை பார்த்து தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.  இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பெண் எம்.பி. ரஜ்சீத் ரஞ்சன் (Ranjeet Ranjan) மாநிலங்களவையில், "இளைஞர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வன்முறை காட்சிகளும் ஆணாதிக்க கதையமைப்பும் அதிகம் உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு அளிக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    • திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
    • ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாடு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்கோபால் வர்மா நேற்று காலை ராஜமுந்திரி ஜெயில் முன்பாக காரில் சென்று கொண்டு இருந்தார்.

    திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.

    பின்னர் ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். படத்திற்கு கீழே இல்லை@ஒய்.எஸ். ஜெகன் உள்ளே இல்லை என பதிவு செய்து இருந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    ஜெயில் வாயில் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ராம் கோபால் வர்மா ஜெயில் வாயில் அருகே செல்லாமல் மெயின் ரோட்டில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாக தெரிவித்தனர்.

    சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக அவர் செல்பி எடுத்ததால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
    • இவர் தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

    ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

    சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் இனிமேல் இந்தி படங்கள் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


    ராம் கோபால் வர்மா

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், " பாலிவுட் படங்கள் இனி ஓடாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' திரைப்படம் மாற்றியமைத்தது. 'காந்தாரா', 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎப்' படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.

    பொருட்களுக்கு லேபிள் இடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. ஒருவேளை ராஜமவுலி ஒடிசாவிலோ, குஜராத்திலோ பிறந்ததிருந்தால் அவர் இந்த மாதிரியான படங்களைத் தான் இயக்கியிருப்பார். நான் தற்போது அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் இந்தி படம் ஒன்றை இயக்குவேன்" என்று கூறினார்.

    • ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
    • இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படத்தை இயக்கியுள்ளார்.

    ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக இருக்கிறது.

     

    சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.

    ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் படத்திற்காக விதவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

     

    அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் கவர்ச்சியாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதில், நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்க்கிறார். பிறகு நடிகையின் பாதத்தை கடிப்பது போன்று அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தனது படத்தை விளம்பரப்படுத்த இப்படி ஒரு செயலைச் செய்ததால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

    • பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது இயக்கியுள்ள படம் 'பொண்ணு'.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள திரைப்படம் 'லடுக்கி'. இப்படம் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழில் 'பொண்ணு' என்கிற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபல மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராம் கோபால் வர்மா, "இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான, மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது.


    அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சீனாவில் உள்ள ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.

    கொரோனா காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ்லியின் 'எண்டர் தி டிராகன்' திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது எனது கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார்.

    ராம்கோபால் வர்மா படத்தில் சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் பாடலை நீக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் எம்எல்ஏ பிட்டாபுரம் தொகுதி எம்எல்ஏ வழக்கு தொடர்ந்துள்ளார். #ChandrababuNaidu #Ramgopalvarma
    நகரி:

    மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும், பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ராம் கோபால் வர்மா “லட்சுமீஸ் என்.டி.ஆர்.” என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தில் தகா தகா (மோசடி... மோசடி) என்ற பாடல் வெளியிடப்பட்டது. பாடல் காட்சியில் தகா என்னும் வார்த்தை வரும்போது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை காட்டி உள்ளனர்.

    இது சந்திரபாபு நாயுடுவை அவமதிப்பதாக உள்ளதாகவும் இப்பாடல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்று கூறி ஐதராபாத் ஐகோர்ட்டில் பிட்டாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வர்மா மனுதாக்கல் செய்தார்.

    அதில் இந்த பாடல் காட்சியை யூ-டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்கி விடும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடும்படி மனுவில் கேட்டுக் கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ராஜசேகர ரெட்டி, மத்திய, மாநில சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

    மனுதாரரின் கோரிக்கை மற்றும் இது சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் தங்கள் முன் வைக்கும்படி நீதிமன்றம் நோட்டீசில் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    இப்படத்தில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி கதையை வைத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChandrababuNaidu #Ramgopalvarma
    பிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம் நடத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்கள். #RamGopalVarma
    பிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்து படங்களை இயக்கி வருகிறார். அவர் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சியை நிறுவிய என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி சிவபார்வதி கதையை சினிமா படமாக எடுத்துள்ளார். அதற்கு லட்சுமியின் என்.டி.ஆர். என்று பெயர் சூட்டி உள்ளார்.

    இப்படத்தில் என்.டி.ராமராவின் மருமகனும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதையடுத்து, இப்படத்துக்கு எதிராக தெலுங்கு தேசம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜயவாடாவில் உள்ள பிலிம்சேம்பர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேச கட்சி தலைவர் சாம்பசிவராவ் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருக்கு எதிராக கோ‌ஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அப்போது, ராம்கோபால் வர்மாவின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



    இதற்கிடையே கர்னூல் எம்.எல்.ஏ. எஸ்.வி.மோகன் ரெட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இயக்குனர் ராம்கோபால் வர்மா யூடியூப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்களை வைத்து தயாரித்திருக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படம் ரிலீசாகு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #RamGopalVarma
    தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். 

    இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் ‘பைரவா கீதா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதிய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.



    இப்படத்தின் பாடல்களையும், பர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா’ அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
    ×