என் மலர்

  நீங்கள் தேடியது "mother milk"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும்.
  • தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

  தாய்ப்பால் வங்கிகளில் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று சேமிக்க முடியும். அது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உணவாக அமையும். பிறந்து சில நாட்களில் குழந்தை இறந்தவர்கள், அதிகளவு தாய்ப்பால் சுரப்பவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  பச்சிளங்குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் தர வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. மாட்டுப்பாலை விட, தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தையின் மூளை வளார்ச்சி நன்றாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஊட்டச்சத்து கிடைக்காதவர்கள் ஆகியோருக்கு இது சாத்தியமாவதில்லை.

  வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை பாத்திரத்தில் சுரந்து சேமிக்க முடியும். அறை வெப்ப நிலையில், அதிகபட்சம் ஏழு மணி நேரம் வரை இந்தப் பாலைச் சேமித்து வைக்கலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது யாரேனும் ஒருவர் அதை ஸ்பூனால் எடுத்து ஊட்டி விடலாம். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தாய்ப்பால் வங்கிகள் உதவியாக அமையும்.

  சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் தாய்மார்களுக்கு நோய் எதுவும் இருக்கிறதா என்று முதலில் பரிசோதிப்பார்கள். ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது தாய்ப்பால் எடுத்துக் கொள்ளப்படும். சுமார் 20 டிகிரியில் குளிரூட்டப்பட்டு சேமித்து, தாய்ப்பால் வேண்டும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது.

  இத்தகைய வசதிகளை பயன்படுத்த, சமூகத்தில் நிலவும் தயக்கத்தை உடைத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்படி செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது.
  • தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு முறைக்கு முக்கிய பங்கு உண்டு. தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏதேனும் பாதிப்பை குழந்தை எதிர்கொண்டால் அந்த உணவுகளை ஒரு வாரம் வரை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியம் குறைந்திருந்தால் அந்த உணவு களை அறவே தவிர்த்துவிட வேண்டும். தாய்ப் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்:

  மீன்களில் உள்ளடங்கி இருக்கும் பாதரசம் பச்சிளம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி அதிக அளவு பாதரசம் கொண்ட மீன் வகைகளை தாய்மார்கள் தொடர்ந்து உட்கொண்டு வருவது குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் தாமதமாகும். குறிப்பாக டுனா, சுறா, வாள் மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிலும் இறால், நண்டு, ஆக்டோபஸ் போன்ற 'ஷெல்பிஷ்' மீன் இனங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

  இருப்பினும் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டது. எனவே பாதரசம் அளவு குறைவாக உள்ள மீன்களை வாரத்திற்கு இரு முறை உட்கொள்வது நல்லது.

  காபி மற்றும் சாக்லெட்டில் காபின் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் காபின் தாய்ப்பாலில் கலந்துவிடக்கூடும். குறிப்பாக காபின் குழந்தையின் தூக்க செயல்முறைக்கு தொந்தரவு கொடுக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் 2 கப் காபிக்கு மேல் பருகக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு துண்டு சாக்லெட்டு களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.

  தாய்ப்பால் கொடுக்கும்போது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி இருந்தால் கார உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

  அஸ்பாரகஸ், பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலி பிளவர் போன்றவையும் தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லை இருந்தால், இந்த உணவுகளை ஓரிரு வாரங்கள் காட்டாயம் தவிர்த்து விடுவது நல்லது.

  தேநீரிலும் காபின் உள்ளது. இது குழந்தையின் செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. மேலும் தாயின் உடலில் இரும்பு உறிஞ்சப்படும் செயல்முறையையும் கடினமாக்கும். பிரசவத்தின்போது இழக்கப்பட்ட இரும்பு சத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமானது. அதனால் இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், தானியங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகளுடன் தேநீர் பருகக்கூடாது.

  புதினா குடும்பத்தை சேர்ந்த பெப்பர்மிண்ட் மற்றும் கொத்தமல்லி தழை போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடும். தாய்ப்பால் சுரப்பு குறைவதாக உணர்ந்தால் இவற்றை சமையலில் சேர்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

  தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சர்க்கரை பானங்களும் அடங்கும். சோடாக்கள், பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், குளிர் பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாகம் எடுக்கலாம். சோடா அல்லது குளிர் பானங்களை உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் பருகுவதுதான் சிறந்தது.

  பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது. எனினும் குழந்தைக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால், பசும்பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  குழந்தைகளின் மார்பு, கன்னத்தில் அரிப்பு, சொறி போன்ற தோல் அழற்சி பிரச்சினைகள் ஏற்பட்டால் வேர்க் கடலை போன்ற நட்ஸ் வகைளை தாய்மார்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன.
  • பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.

  பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.

  குழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதாரணமாக ஒதுக்கிவிடக்கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது.

  பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும்.

  மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.

  தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது.

  பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம்.

  ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது.
  • தாய்ப்பாலை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம்.

  தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பால் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

  இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பொதுவாக குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் வன்மைக்கும், வளா்ச்சிக்குமான அடித்தளம். ஆறு மாதம் வரை அவா்களுக்கு அதுவே ஊட்டமளிக்கும் உணவு. அதற்கு பின்னரே திட உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

  தாய்ப்பால் என்பதை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம். அதில் 88 சதவீத அளவுக்கு நீா் உள்ளது. ஆகவே எந்த தட்பவெப்ப நிலையிலும், சூரிய வெப்பம் 100 டிகிரிக்கு மேல் சென்றாலும் குழந்தைகளுக்கு நீா்சத்து இழப்பு ஏற்படாமல் இது தடுக்கும். தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளா்ச்சிக்கு தேவையான புரதசத்து 1 சதவீதம் உள்ளது.

  குழந்தைகளுக்கு மட்டுமே செரிமானம் ஆகக்கூடிய லாக்டோஸ் எனும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, சி, டி, இ, ரிபோபிளவின் (பி2), நியாசின் ஆகியவையும் உள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக கட்டமைக்கும். தாது உப்பு சத்துகளும் இதில் அடங்கும். தாய்ப்பாலில் தாது உப்பு சத்துகளான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜிங்க் சத்துகள் உள்ளன.

  இவற்றின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகள் குடலுக்கு உட்கிரகிக்கும் சக்தி அதிகம். குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுத்தால் அதில் உள்ள சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் வெளியேறிவிடும். ஆகவே, குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டாவது கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

  தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு நன்மை செய்வதோடு, தாய்க்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். முக்கியமாக மார்பகப் புற்றுநோய், சினைப்பை, கருப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், அவா்களின் உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும். அதிக மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையவையாகவும், ஆஸ்துமா, அலா்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவையாகவும் வளா்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து உள்ளது.
  • பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான்.

  தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

  குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் உன்னத பரிசு தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான், குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை 'கொலஸ்ட்ரம்' என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  புரோட்டீன், கொழுப்பு அதிகமுள்ள இந்த பால் தான் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதல் தடுப்பு மருந்து என்றும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த பாலை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போதைய காலச்சுழற்சியில் வேலைக்கு செல்லும் பெண்களும் தாய்ப்பால் பாதுகாப்பான முறையில் எடுத்து வைத்து கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன.

  அதேபோல், தாய்மார்கள் பணிபுரியும் இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது.

  தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது. குழந்தை பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதை தாமதப்படுத்துகிறது.

  தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்ப்பாலில் குழந்தையைப் பாதுகாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன.
  • தாய்க்கும் சேய்க்கும் இடையே நல்ல நேசப் பிணைப்பினை உண்டாக்குகிறது.

  * தாய்ப்பால் மிகவும் உயர்வான ஓர் சிறந்த கலவை ஆகும். இது குழந்தை மிக எளிதில் சீரணிக்குமாறு உள்ளது. தாய்ப்பாலில் குழந்தையைப் பாதுகாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன.

  * தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பேதி சுவாச மண்டல நோய்கள் போன்ற தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை.

  * தாய்ப்பால் உடனடியாகக் கிடைக்கக்கூடியது. கிருமிகள் இல்லாத கலவை ஆகும். அனைவருக்கும் ஏற்றதாகவும் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது. தயார் செய்யவோ ஏதும் செலவு செய்யவோ தேவையில்லை.

  * அலர்ஜி நோய்கள் வராமல் குழந்தையைக் காக்கின்றது. குழந்தை எளிதாக மலம் கழிக்க தாய்ப்பால் உதவுகிறது. மலச்சிக்கல் வராமல் காக்கின்றது.

  * தாய்க்கும் சேய்க்கும் இடையே நல்ல நேசப் பிணைப்பினை உண்டாக்குகிறது.

  * தாய்ப்பாலூட்டுதல் ஓர் இயற்கையான கர்ப்பதடையாகவும் விளங்குகிறது. பாலூட்டும் சமயத்தில் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

  * கர்ப்பபை பழைய நிலைக்கு சுருங்கவும் தாய்ப்பாலூட்டும் செயல் உதவுகிறது.

  * தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் அதிக புத்திசாலித்தனத்துடனும் பிற்கால வாழ்க்கையில் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இருதய நோய், கல்லீரல், கேன்சர் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படாமலும் இருக்கிறார்கள்.

  * தாய்க்கு தாய்பாலூட்டுவதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

  * பணம், நேரம் ஆகிய அனைத்தையும் சேமிக்க உதவுவதோடல்லாமல் தாய்ப்பாலூட்டுதலினால் குடும்பம் சமூகம் ஆகியவை பால், ஆரோக்கியம் நோய்களுக்காக மிகக் குறைவாகவே செலவு செய்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள்.
  உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 40 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 8 சதவீத குழந்தைகள் மிகவும் மெலிந்தும், எலும்பும் தோலுமாக பிறக்கின்றன. 30 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாக பிறக்கின்றன.

  தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தாய்ப்பால் அவசியம் அதன் நன்மைகள் குறித்து கூடுதல் பேராசிரியரும், குழந்தைகள் நல மருத்துவருமான டி.குணசிங் விளக்கம் அளித்துள்ளார். அவை வருமாறு:

  தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் இணை உணவுகளுடன் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதுமேயாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்க கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூ­ளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

  தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?

  குழந்தை பிறந்தவுடன் ஈரத்தை துணியால் துடைத்து விட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அனைத்து பிறந்தவுடன் பால் தர வேண்டும். பிறந்தவுடன் தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும்.

  ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?


  குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கி விடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

  குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவை கொடுக்கலாமா?

  குழந்தை பிறந்தவுடன் சுரக்கும்பால் “சீம்பால்” என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்ப தால் குழந்தைக்கு தொற்று நோய் வருவதற் கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்பிட மறுத்து விடும். இதனால் தாய்க்கு பால் கட்டி பிரச்சினைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

  சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

  தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நலையிலேயே செவிலியர், உறவினர்கள் குழந்தையை மார்போடு அனைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும், பாலும் கொடுக்கக்கூடாது.

  குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?


  குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந் தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.  குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தர வேண்டும்?

  குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தர வேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 தைல் 20 முறைகளும் பால் குடிக்கும்.

  குழந்தை தேவையான அளவு தாய்ப் பால் குடிக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  குறைமாத குழந்தை, எடை குறைவான குழந்தைக்குக்கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா?

  ஆம், குறை மாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்.

  தாய் நோய்வாய் பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

  பெரும்பான்மையான சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம். அதுதான சமயங்களில் (உதாரணம்: தாய் புற்று நோய்க்கு மருந்து சாப்பிடுதல்) மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். இச்சமயங்களில் தாய்ப்பாலூட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

  குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

  கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

  குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?

  தாய்ப்பால் போதவில்லை என்பது பேதைமையே. தைலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும். சரியான அளவில் (500 கிராம் மாதம்) எடை கூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ, பாலோ, தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க.

  * குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
  * பகல்-இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
  * புட்டிப்பால், சூப்பான் உபயோகிக்கப்படுகிறதா?
  * வேறு பாலோ, உணவோ கொடுக்கப்படுகிறதா?  * குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் ஒட்டுதல் உள்ளதா?

  மேற்கூறியவற்றில் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாய்க்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

  தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

  குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் ஊறும். ஆகவே குழந்தை அதிக அளவு சப்ப வைத்தால் அதிக அளவு ஊறும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

  குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

  குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போது மானதாக கிடைக்கிறதா என சரி பார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

  குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தை தாலாட்டவும், தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், வயிற்றில் கையால் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும், மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலி மருந்து கொடுக்கலாம்.

  புட்டிபால் கொடுக்கலாமா?

  கட்டாயம் கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்தி விடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்று விடும். மேலும் புட்டிபால் கொடுப்பதால் கிருமி தொற்று, பேதி, நிமோனியா ஏற்படவும் வாய்ப் புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ, கரண்டியோ உபயோகிக்கலாம்.

  தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமா?

  தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு அழகு குறையாது. அழகு கூடத்தான் செய்யும். உடல் மெலிந்து ‘சிலிம்’ஆக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தால் மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.
  குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

  பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவர்களது குழந்தைகளை தான் பாதிக்கும் என ஆய்வின் முடிவு ஒன்று கூறுகிறது.

  அமெரிக்கன் அகெடமி ஆம் பீடியாட்ரிக்ஸ் நடத்திய இந்த ஆய்வில் பாலூட்டும் தாய்மார்கள் புகைப்பிடித்தால் அது அவர்களின் குழந்தைகளின் அறிவாற்றல் திறமைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் தாய்மை அடைந்த பிறகு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதில்லை., எனினும் புகைபிடிக்கும் பெண்கள் தாய்மை அடைவர் என்பது யதார்த்தம் தானே!..

  பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.

  புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

  கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.
  பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மிக முக்கியம். கடினமான செயல் எனினும், சில முயற்சிகள் கொண்டு கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குறுநடை போடும் குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து நிறுத்திவிடலாம்.

  முதலில் தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் போது தாயானவள், தன்னையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், தாய்ப்பாலை இயற்கையாகவே நிறுத்தப்படலாம். இது தாயின் உடல்வாக்கை பொறுத்து அமையும். எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் பால் குறைய வாய்ப்புள்ளது.  படிப்படியாக மெதுவான முறையில் தாய்ப்பாலை விடுவித்தலால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம்.

  குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகம் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

  மேலும் குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும் போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இதனால் அவர்களை தாய்ப்பாலில் இருந்து மறக்கடிக்கலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் டபிள்யூஎச்ஓ யுனிசெப் சார்பில் 10 அம்ச புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

  குழந்தைக்கு பால் ஊட்டுவதற்காக தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால் நோய் தொற்றுகளில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கலாம். தாய்ப்பால் ஊட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினாலோ, வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய் தொற்றுகள் காரணமாக பச்சிளங் குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

  உலகம் முழுவதும் சரியாக தாய்ப்பால் ஊட்டாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன. எனவே, பிறந்தது முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுக்கு 5 வயதுக்கு உட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தையின் கவனம், அறிவுத்திறன் மேம்படும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.

  இதன் மூலம் தனிப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் சுகாதாரத்துக்காக ஒதுக்கும் செலவு கணிசமாக குறையும். எனவே, தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் அவசியமாகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  நமக்கு குழந்தை பிறப்பது எவ்வளவு பாக்கியம் என்று நினைக்கிறோமோ, அதே போல் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட, தாய் கிடைப்பதும். நம் நாட்டில் பல குழந்தைகள் தாயின்றி, காப்பகத்தில் காப்பாளர்களின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள். 
  ×