search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Mokhber"

    • ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது. 

    முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    புதுடெல்லி:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. 

     இப்ராஹிம் ரைசி

     இப்ராஹிம் ரைசி

    இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
    • ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை.
    • சபஹரை பிராந்திய வளர்ச்சி துறைமுகமாக மாற்றுவது குறித்து ஆலோசனை

    ஈரான் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தெக்ரானில் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்துப் பேசினார்.

    அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். இது மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சுட்டிக்காட்டினார். ஈரான் துணை அதிபருடனான சந்திப்பு, வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரான் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஸ்டம் காசெமியுடன், இருதரப்பு சந்திப்பில் சோனாவால் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

    ×