search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Lakshminarayanan"

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை.

    புதுச்சேரி:

    புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இதன்படி சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைப்பதற்கான இடம், பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

    புதுவை நகர பகுதிக்கு ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை. 100

    எம்.எல்.டி. குடிநீர் பிளான்ட் அமைக்க ரூ.800 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டது. இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விளக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:-

    புதுவை எதிர்காலத்தில் நிலத்தடி நீரை மட்டும் சார்ந்திருக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 40 எம்.எல்.டி. அளவு கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
    • அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் தகவல் தொழில்நுட்ப உட்கட்ட மைப்பை மேம்படுத்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், உயர்கல்வித்துறை செயலர் ருத்ரகவுடு, தேசிய தகவல் தொழில்நுட்ப துறை ராஜசேகர், குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், தனிஷ்குமார், நாகராஜன், சரவணன், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் சேவை திட்டங்களை இணையதளம் மூலம் வழங்குவது, அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி 14-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தற்போதைய நிலையிலேயே புதுவை தொடரும் என தெரிவித்துள்ளது. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை புதுவையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும், பா.ஜனதா கூட்டணியிலிருந்து என்ஆர்.காங்கிரஸ் விலக வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். எம்.எல்.ஏ.க்களோடு டெல்லிக்கு சென்று பிரதமரை வலியுறுத்தி மாநில அந்தஸ்து பெற வேண்டும்.

    புதுவை மக்கள் போராட்டம் நடத்த முதல்-அமைச்சர் அழைப்பு விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசின் இந்த முடிவு நிலையா னது அல்ல, டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அனுப்பிய கடிதத்தின் பொருள், தற்போதைய நிலையே தொடரும் என்பதுதான். அதற்கு மாநில அந்தஸ்து மறுப்பு என கருத்தில் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களுக்கு தெரிந்த வகையில் எடுத்துக்கொள்கின்றனர். 'புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லை என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது. இது சட்டரீதியாக மறுக்கப்பட்ட விஷயம். இதை அரசியல் ரீதியாக எடுத்துச்செல்ல வேண்டும்.

    1954-ம் ஆண்டு முதல் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது மாநில அந்தஸ்து பெற்றிருக்க வேண்டிய வர்கள், அதை செய்ய தவறியதால் மிகப்பெரிய பளுவை புதுவை அரசு சுமந்து கொண்டிருக்கிறது.

    நிர்வாகத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரும் அதிகாரிகள், கோப்புகளுக்கு காலதாமதம் செய்வது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
    • தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமை ச்சர் லட்சுமிநாராயணன் இன்று காலை ஆலோச னைக்கூட்டம் நடத்தினர்.

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு ஏற்படும் இடர்களை களைவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    வெள்ள நீரை வெளியேற்ற மோட்டார், பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தி னார். அதிகாரிகள் அனைவரும் 24மணி நேரமும் பணியில் இருந்து வெள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், 

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த மருத்துவ கருத்தரங்கு, கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-

    புதுவை அரசு சார்பில் சென்டாக் மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங், நர்சு உள்ளிட்ட படிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடங்கும்போது மாணவர்களுக்கு நிதி வழங்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் தற்போது 13 ஆயிரம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க காமராஜர் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 60 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க நிதி அளித்துள்ளோம்.

    ஒட்டுமொத்தமாக சென்டாக் மூலம் 2003-ம் ஆண்டு முதல் இதுவரை மாணவர்களுக்கு ரூ.450 கோடி கல்விக்கு நிதியாக வழங்கியுள்ளோம். இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம். அதேபோல கல்வி என நினைத்தால் காமராஜர்தான் நினைவுக்கு வருவார்.

    ஆனால் புதுவையை பொறுத்தவரை முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் கல்விக்கு வித்திட்டவர். புதிய கண்டுபிடிப்புகளை 4 சதவீதம்பேர்தான் கண்டறிகின்றனர். 96 சதவீதத்தினர் பயன்படுத்துகின்றனர். 60 மருத்துவ விஞ்ஞானிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

    உங்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்பத்தில் நாட்டில் 500 கல்வி நிறுவனங்கள்தான் இயங்கி வந்தது. தற்போது 60 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளது. படிப்பறிவு பெற்றவர்கள் நாடு முழுவதும் 85 சதவீதமாக உயர்ந்துள்ளனர். புதுவையில் 96 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்திட்டதுதான் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை ஐ.ஐ.டி. முதன்மை அதிகாரி சங்கர்ராமன், புதிய ஆய்வு பிரிவு தலைவர் ராஜேந்திரமேத்தா, கட்டிடக்கலை பிரிவு முதன்மை அதிகாரி ராபின்சன், பேராசிரியர் ரமேஷ்சிங், ஆலோசகர் சரவணசுந்தரம் அடங்கிய குழுவினர் கடந்த 23-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியை

    சந்தித்தனர். அப்போது சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை புதுவையில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சேதராப்பட்டில் இதற்காக மையம் அமைத்தால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேதராப்பட்டில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், புதுவையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ஆலோசனை நடத்தினர்.

    அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஓரிருநாளில் சென்னைக்கு சென்று ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை பார்வையிட உள்ளார். புதுவையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    • மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.
    • கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    மத்திய இணை மந்திரி முருகன் வருகிற 29-ந் தேதி புதுவைக்கு வருகிறார்.மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

    அப்போது மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான பூர்த்தி செய்த கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களும்இந்த அப்டையை பயன் படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்தலாம்.

    வருகிற 29-ந் தேதி கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவு
    • ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. படகு குழாமில்  முன்தினம் மரத்தினால் அமைக்கப் பட்டிருந்த படகு பாலம் உடைந்து உள்வாங்கியது.

    இதில் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்தனர். அவர்களை ஊழியர்கள் மீட்டனர். ஆனாலும் நேற்று வழக்கம் போல படகுசவாரி தொடங்கப்

    பட்டது. இந்நிலையில் தகவலறிந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமிற்கு சென்றார். அங்கு உடைந்த நிலையில் இருந்த படகு பாலத்தை பார்வையிட்டார்.

     பின்னர் 100 பேர் ஏறி நின்றாலும் உடையாத அளவுக்கு பனை மரத்தால் வலுவான பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்த ரவிட்டார். ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.

    • புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.
    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.

    வாய்க்காலில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது. இதை தடுக்க தொகுதி எம்.எல்.ஏ. நேரு, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார். இதற்காக புதுவை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    துர்நாற்றம் வீசுதல் மற்றும் கொசு உற்பத்தியை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மறைமலை சாலையில் உள்ள லட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இதற்கான சோதனை முயற்சி தொடக்கவிழா இன்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

    தொகுதி எம்.எல்.ஏ. நேரு முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.
    • மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.

    இதை பரிசீலித்த மத்திய அமைச்சகம், மத்திய நீர்வள ஆணைய சேர்மன் அபிஷேக்சின்கா, பொறியாளர் தங்கமணி ஆகியோர் தலைமையில் துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், தர்மேந்திரசிங் கொண்ட மத்திய நீர் ஆணைய நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் புதுவைக்கு வந்து சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் நீர்மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினர். புதுவையில் சாத்தியமான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆறுகளில் கரையை 2 மீட்டர் உயர்த்த வேண்டும்.

    மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும். ஆறு, குளங்களின் கரைகளை பலப்படுத்தி சாத்தனூர் அணையிலிருந்து புதுவைக்கு தண்ணீர் கொண்டுவர சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    மேட்டூரில் கல்லணை வழியாக காரைக்காலுக்கு தண்ணீர் கொண்டுவரும் சாத்திய ங்களை ஆராய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் மத்திய குழுவினர் சங்கராபரணி ஆறு, ஆரியப்பாளையம், கோனேரிக்குப்பம், செல்லி ப்பட்டு, நோணாங்குப்பம், தென்பெண்ணை யாறு, மணமேடு, சோரியாங்குப்பம் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த கூட்டத்தில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.
    • மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறைந்துள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாரா யணன் பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-

    புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சி, இளைஞர்கள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. அமலான பின் புதுவையின் வருவாய் திரட்டும் வழிகள் குறைந்துள்ளது.

    தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் மாநில நிதி வருவாய் குறைந்துள்ளது.ஜி.எஸ்.டி இழப்பீடு நிறுத்தம் நித பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. 2022-23-ம் ஆண்டு புதுவை வருவாய் இடைவெளி ரூ.ஆயிரத்து 710 கோடியாகும்.

    மத்திய அரசு சிறப்பு மத்திய உதவியை நீட்டிக்கா விட்டால் ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரிக்கும். பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு வழங்கும் நிதி ஆதாரத்தை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறை ந்துள்ளது. இதனால் மத்திய நிதி உதவியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை அரசு 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்களை நிரப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

    இந்த பதவிகளை நிரப்ப குறைந்தபட்சமாக ரூ.254 கோடி கூடுதலாக வழங்க வேண்டும். மற்ற மாநிலங்கள்போல புதுவைக்கு நிதி பகிர்வு கிடைக்கவில்லை.

    7-வது சம்பளக்குழு பரிந்துரை நிலுவைத்தொகை வழங்க ரூ.186.50 கோடி நிதி தேவை.புதுவையில் மூலதன உள்கட்டமைப்பு வசதிகளான விமானநிலைய விரிவாக்கம், சட்டசபை வளாகம், சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவம், சட்ட பல்கலைக்கழகம் போன்ற திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 147 கோடியை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுவையின் திட்டக்கடன் ரூ.104.24 கோடி, திட்டமில்லா கடன் ரூ.210 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய நிதி, உள்துறை அமைச்சகம் நிதி ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவை அரசு நீண்ட காலத்துக்கு பிறகு 2023-ம் ஆண்டு பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே காலத்தோடு மத்திய அரசு நிதி உதவியை சிறப்பு தொகுப்போடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

    • மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது
    • அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    புதுச்சேரி:

    அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகாமை ஆகியவை சார்பில் தேசிய மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

    அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு சொந்தமான பாகூரில் அமைந்துள்ள மீன் குஞ்சு வளர்ப்பு மையத்தில் சீர்காழியில் அமைந்துள்ள மத்திய அரசின் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் மூலம் திலேப்பியா மீன் பொரிப்பகம் அமைப்பதற்க்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

    தொடர்ந்து, நன்னீர் மீன்வளர்ப்போரை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 20 மீன்வளர்ப்போருக்கு நன்னீரில் வளரக்கூடிய கொடுவா மற்றும் திலேபியா மீன் குஞ்சுகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.

    முருங்கப்பாக்கம் மற்றும் தேங்காய்த்திட்டு சதுப்பு நிலக்காடுகளில் கல்நண்டு உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு சுமார் 1500 கல்நண்டு குஞ்சுகள் விடப்பட்டது. மேலும், உள்நாட்டு மீன்வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பற்றி விளக்கப்பட்டது.

    இதில் செல்வகணபதி எம்.பி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. , அரசுச் செயலர்கள் நெடுஞ்செழியன், ராகவன், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி, இணை இயக்குநர் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்வளர்ப்போர்கள் பங்குபெற்றனர். விழா ஏற்பாடுகளை துணை இயக்குநர கோவிந்த சாமி செய்திருந்தார்.

    ×