search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவைக்கு ரூ.2,147 கோடி வழங்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    புதுவைக்கு ரூ.2,147 கோடி வழங்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

    • மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.
    • மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறைந்துள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாரா யணன் பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-

    புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சி, இளைஞர்கள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. அமலான பின் புதுவையின் வருவாய் திரட்டும் வழிகள் குறைந்துள்ளது.

    தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் மாநில நிதி வருவாய் குறைந்துள்ளது.ஜி.எஸ்.டி இழப்பீடு நிறுத்தம் நித பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. 2022-23-ம் ஆண்டு புதுவை வருவாய் இடைவெளி ரூ.ஆயிரத்து 710 கோடியாகும்.

    மத்திய அரசு சிறப்பு மத்திய உதவியை நீட்டிக்கா விட்டால் ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரிக்கும். பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு வழங்கும் நிதி ஆதாரத்தை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறை ந்துள்ளது. இதனால் மத்திய நிதி உதவியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை அரசு 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்களை நிரப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

    இந்த பதவிகளை நிரப்ப குறைந்தபட்சமாக ரூ.254 கோடி கூடுதலாக வழங்க வேண்டும். மற்ற மாநிலங்கள்போல புதுவைக்கு நிதி பகிர்வு கிடைக்கவில்லை.

    7-வது சம்பளக்குழு பரிந்துரை நிலுவைத்தொகை வழங்க ரூ.186.50 கோடி நிதி தேவை.புதுவையில் மூலதன உள்கட்டமைப்பு வசதிகளான விமானநிலைய விரிவாக்கம், சட்டசபை வளாகம், சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவம், சட்ட பல்கலைக்கழகம் போன்ற திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 147 கோடியை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுவையின் திட்டக்கடன் ரூ.104.24 கோடி, திட்டமில்லா கடன் ரூ.210 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய நிதி, உள்துறை அமைச்சகம் நிதி ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவை அரசு நீண்ட காலத்துக்கு பிறகு 2023-ம் ஆண்டு பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே காலத்தோடு மத்திய அரசு நிதி உதவியை சிறப்பு தொகுப்போடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

    Next Story
    ×