என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உப்பனாறு வாய்க்காலில் கொசு ஒழிப்பு நடவடிக்கை-அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தனர்
    X

    உப்பனாறு வாய்க்காலில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்த காட்சி.

    உப்பனாறு வாய்க்காலில் கொசு ஒழிப்பு நடவடிக்கை-அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தனர்

    • புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.
    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.

    வாய்க்காலில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது. இதை தடுக்க தொகுதி எம்.எல்.ஏ. நேரு, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார். இதற்காக புதுவை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    துர்நாற்றம் வீசுதல் மற்றும் கொசு உற்பத்தியை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மறைமலை சாலையில் உள்ள லட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இதற்கான சோதனை முயற்சி தொடக்கவிழா இன்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

    தொகுதி எம்.எல்.ஏ. நேரு முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×