search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு கல்வி நிதியாக ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது
    X

    கோப்பு படம்.

    மாணவர்களுக்கு கல்வி நிதியாக ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த மருத்துவ கருத்தரங்கு, கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-

    புதுவை அரசு சார்பில் சென்டாக் மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங், நர்சு உள்ளிட்ட படிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடங்கும்போது மாணவர்களுக்கு நிதி வழங்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் தற்போது 13 ஆயிரம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க காமராஜர் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 60 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க நிதி அளித்துள்ளோம்.

    ஒட்டுமொத்தமாக சென்டாக் மூலம் 2003-ம் ஆண்டு முதல் இதுவரை மாணவர்களுக்கு ரூ.450 கோடி கல்விக்கு நிதியாக வழங்கியுள்ளோம். இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம். அதேபோல கல்வி என நினைத்தால் காமராஜர்தான் நினைவுக்கு வருவார்.

    ஆனால் புதுவையை பொறுத்தவரை முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் கல்விக்கு வித்திட்டவர். புதிய கண்டுபிடிப்புகளை 4 சதவீதம்பேர்தான் கண்டறிகின்றனர். 96 சதவீதத்தினர் பயன்படுத்துகின்றனர். 60 மருத்துவ விஞ்ஞானிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

    உங்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்பத்தில் நாட்டில் 500 கல்வி நிறுவனங்கள்தான் இயங்கி வந்தது. தற்போது 60 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளது. படிப்பறிவு பெற்றவர்கள் நாடு முழுவதும் 85 சதவீதமாக உயர்ந்துள்ளனர். புதுவையில் 96 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்திட்டதுதான் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×