search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசியல் அழுத்தம் மூலமாகவே மாநில அந்தஸ்தை பெற முடியும்
    X

    கோப்பு படம்.

    அரசியல் அழுத்தம் மூலமாகவே மாநில அந்தஸ்தை பெற முடியும்

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி 14-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தற்போதைய நிலையிலேயே புதுவை தொடரும் என தெரிவித்துள்ளது. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை புதுவையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும், பா.ஜனதா கூட்டணியிலிருந்து என்ஆர்.காங்கிரஸ் விலக வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். எம்.எல்.ஏ.க்களோடு டெல்லிக்கு சென்று பிரதமரை வலியுறுத்தி மாநில அந்தஸ்து பெற வேண்டும்.

    புதுவை மக்கள் போராட்டம் நடத்த முதல்-அமைச்சர் அழைப்பு விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசின் இந்த முடிவு நிலையா னது அல்ல, டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அனுப்பிய கடிதத்தின் பொருள், தற்போதைய நிலையே தொடரும் என்பதுதான். அதற்கு மாநில அந்தஸ்து மறுப்பு என கருத்தில் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களுக்கு தெரிந்த வகையில் எடுத்துக்கொள்கின்றனர். 'புதுவைக்கு உரிய அதிகாரம் வேண்டும் என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லை என ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது. இது சட்டரீதியாக மறுக்கப்பட்ட விஷயம். இதை அரசியல் ரீதியாக எடுத்துச்செல்ல வேண்டும்.

    1954-ம் ஆண்டு முதல் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது மாநில அந்தஸ்து பெற்றிருக்க வேண்டிய வர்கள், அதை செய்ய தவறியதால் மிகப்பெரிய பளுவை புதுவை அரசு சுமந்து கொண்டிருக்கிறது.

    நிர்வாகத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரும் அதிகாரிகள், கோப்புகளுக்கு காலதாமதம் செய்வது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×