search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mini lorry"

    • நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
    • மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இருந்து மாட்டு சாணம் உரம் ஏற்றி கொண்டு ஒரு மினிலாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த ஜெனிஸ்குமார் (வயது 43) ஓட்டி சென்றார்.

    மினிலாரியில் தொழிலாளர்கள் ஆலங்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60), கணபதிபுரம் அருகே உள்ள புதுமடத்தையை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகியோர் இருந்தனர். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மினிலாரியில் மோதியது. இதில் மினிலாரி தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதுபோல மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் ஜெனிஸ்குமார், தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்த யுகேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஜெனிஸ்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பால கிருஷ்ணன் ராஜாக்கள் மங்களம் தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவில்பத்து ஜோதி நகரை சேர்ந்த இளங்கோ (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது.
    • மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவில் கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியிலிருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் எடுத்து வந்து தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மினி லாரியையும், அதிலிருந்த கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம், சோமனூர் ரோடு, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை தேடி வருகின்றனர்.
    • தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பாகூர் மாஞ்சோலை சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்தும் மணல் கடத்தி சென்றவர் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் மினி லாரியை சோதனை செய்தனர்.

    அப்போது மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மினி லாரியை பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணலை கடத்தி செல்ல பயன்படுத்திய மினி லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், தப்பியோடியவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    ஆலங்குளம் அருகே மினி லாரியுடன் வாலிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ்செல்வம் (வயது29). இவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அனந்த நாடார்பட்டி கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறுவனத் தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 24-ந்தேதி இந்த கம்பெனியில் இருந்து தமிழ் செல்வம் மினி லாரியில் மெத்தை லோடுகளை ஏற்றி கொண்டு அருப்புக்கோட்டைக்கு சென்றார். அங்கு மெத்தைகளை இறக்கி விட்டு மறுநாள் அனந்த நாடார் பட்டிக்கு வரவேண்டும். ஆனால் தமிழ்செல்வம் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

    அவரை பற்றிய தகவல்கள் கிடைக்காததால் கம்பெனி மேலாளர் ஆலங்குளத்தை சேர்ந்த எட்வர்ட், பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி மற்றும் மெத்தையுடன் தலைமறைவான தமிழ் செல்வத்தை தேடி வருகிறார்கள்.
    ×