search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manpanai"

    • அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
    • அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

    இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

    அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.


    தானியங்கள்:

    வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.

    சோழி:

    அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.


    மண்பானை:

    அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    சங்கு:

    அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.


    ஸ்ரீசக்கரம்:

    அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    ×