search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian oil company"

    நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. #Diesel #indianoilcompany
    சென்னை:

    பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளையடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கியது. 

    முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு எந்தவித கூடுதல் கட்டணம், வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. REPOSE APP என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Diesel #indianoilcompany
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. #pmmodi #Indianoilcompany
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

    இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

    இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்,  நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி பிரதமர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும். #pmmodi #Indianoilcompany
    கியாஸ் சிலிண்டர் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. #Gas #IndianOilCompany

    சென்னை:

    சமையல் கியாஸ் விற்பனையில் மத்திய அரசின் 3 எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

    சென்னை மண்டலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சுமார் 40 ஆயிரம் சமையல் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

    வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது. இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது.

    மேலும் கூடுதல் பணம் தந்தால் தான் சிலிண்டரை வினியோகம் செய்வோம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் பல இடங்களில் தகராறு செய்கின்றனர்.

    ஒவ்வொரு முறையும் வீடுகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது ஒரு சிலிண்டருக்கு ரூ.50 கூடுதலாக கட்டாயம் தர வேண்டும் என்று அடாவடித் தனம் செய்கின்ற நிலை உள்ளது.

    சிலிண்டர் விலைக்கான தொகையை கொடுத்தால் ஏற்பதில்லை. இது போன்ற பிரச்சினைகளை தடுக்க பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், போன்ற மின்னணு அட்டைகளை பயன்படுத்தி இ.வேலட் முறையில் சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான பயிற்சி சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது ஏற்படும் சில்லரை பிரச்சினை, அதிக தொகை வசூலிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஐ.ஓ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.#Gas #IndianOilCompany

    27 ஆயிரத்து 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.#IndianOilCompany
    சென்னை:

    இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங், இயக்குனர் ராமகோபால், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர்(செயல்பாடு) ஜி.அரவிந்தன், இயக்குனர்(பொறியியல்) யு.வெங்கட்ரமணா உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த ஆண்டை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருவாயை விட 9 சதவீதம் அதிகரித்து 44,188 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. மேலும் பெட்ரோல் உற்பத்தியில், கடந்த ஆண்டை விட 2 மெட்ரிக் டன் அதிகரித்து 1,107 மெட்ரிக் டன் பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசல் உற்பத்தியில் கடந்த ஆண்டை விட 230 மெட்ரிக் டன் அதிகரித்து 4,412 மெட்ரிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது, நாகப்பட்டினத்தில் புதிதாக 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் வகையிலான புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட அனுமதி கிடைத்துள்ளது.

    இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது 2019 மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெறும். இந்த திட்டம் நிறைவடையும் போது தமிழகத்தின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் அது முக்கிய பங்கு வகிக்கும்.

    பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கும் கர்நாடக தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.



    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர்(செயல்பாடு) ஜி.அரவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் எரிபொருள் தேவை 2025-ல் 20 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். தற்போது சென்னையில் மாசு அதிகமாக இருப்பதால் 10 மில்லியன் டன்னுக்கு மேல் பெட்ரோலிய உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முடியாது. நாகப்பட்டினத்தில் 20 வருடமாக 0.5 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் உற்பத்தி செய்து வருகிறோம். இதை வைத்து, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், அரியலூர், மதுரை வரை வினியோகித்து வருகிறோம்.

    தற்போது அங்கு இருக்கும் கட்டமைப்பு, 4-வது உற்பத்தி தர பெட்ரோலிய பொருட்களை தயாரிப்பதற்கு கூட பயன்படாத நிலையில் உள்ளது. எனவே அதனை மாற்றிவிட்டு, அதற்கு பதில் அதே நிலத்தில் 6-வது உற்பத்தி தரத்தில் 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க போகிறோம்.

    இதற்கான கச்சா எண்ணெய் காரைக்கால் துறைமுகம் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே இருக்கும் பைப் லைனை பெரியதாக மாற்றம் செய்து கொண்டு வரப்படும். இதனால், எந்தவித சுற்றுப்புற மாசும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#IndianOilCompany
    ×