search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former MP"

    • கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
    • அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    நெல்லை:

    கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், முடவன் குளம் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பாம்பே செல்வகுமார், இன்பம், வினேஸ்ராஜா மற்றும் கபடி பயிற்சியாளர்கள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்.உடன் தொண்டரணி உள்ளது; ஈ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது-முன்னாள் எம்.பி
    • அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட (ஓ.பி.எஸ். அணி) சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரித்துரை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய ஐயப்பன் எம்.எல்.ஏ., தமிழக தேர்தல் ஆணையம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.-ஐ தான் அ.தி.மு.க.வாக அங்கீகரித்துள்ளது. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் உள்ளார்கள் என்றார்.

    மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோபாலகிருஷ்ணன் பேசிய தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ்.உடன் தொண்டர் அணி உள்ளது. இ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது. அ.தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்ந்த இயக்கம். இந்த இயக்கத்தை தனது சுயநலத்திற்காக அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு விசுவாசத்துடன் ஓ.பி.எஸ். இருக்கிறார். கூவாத்தூரில் தங்கம் தருகிறோம், பணம் தருகிறோம் என்று பேரம் பேசி அவர்கள் அணிக்கு என்னை அழைத்தபோது நான் தங்கம் வேண்டாம் தங்கமகன் ஓ.பி.எஸ். உடன் இருப்பதே மேல் என்று கருதி இருந்தேன். இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறேன்.

    அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான். பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். வழிவகுத்து கொடுத்திக்கிறார். ஆனால் இன்று சிலர் தனது சுயநலத்திற்காக 10 மாவட்ட செயலாளர்கள் சொன்னதால் இடைக்கால பொதுச்செயலாளர் என்று தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அது ஒருபோதும் செல்லாது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வேலுச்சாமி, பி.எஸ்.கண்ணன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, கொம்பையா பாண்டியன், ஆட்டோ கருப்பையா,முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், கமலக்கண்ணன், வெள்ளூர் கார்த்திகேயன், பவுண்டு ராஜ், கணேசத்தேவர், ராதா, முத்து, கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி(47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

    அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். #Iraq #SuicideAttack
    திக்ரித்:

    ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்துக்கு வடக்கே சிர்கத் நகரம் உள்ளது. இதையொட்டிய ஆஸ்திரா என்ற கிராமத்தில், அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. அத்னன் அல் கானத் வீடு உள்ளது. நேற்று அதிகாலை நேரம், இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், அங்கு சென்று குண்டுகளை வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

    இதில் அங்கு இருந்த சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இருந்தபோதிலும், சம்பவம் நடந்த பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருந்து வருவதால், அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    சிர்கத் பகுதி 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு அதை அமெரிக்க படைகளின் ஆதரவுடனும், பழங்குடி போராளிகளின் உதவியுடனும் ஈராக் படையினர் மீட்டு விட்டனர். ஆனாலும் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #Iraq #SuicideAttack #tamilnews 
    ×