search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower tribute"

    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்ட மன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
    • ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில நாளை காலை 7 மணிக்கு ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்ட மன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தண்ணீர் பந்தலும் திறந்து வைக்கப்படுகிறது.

    காலை 9 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து யாத்திரையாக கொண்டு வரப்படும் ராஜீவ் நினைவு ஜோதியை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நினைவேந்தல் உரையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடக பொறுப்பாளருமான கோபண்ணா தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் திமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்தார்.

    இதையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சாலையோரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. விழுப்புரம் வண்டிமேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். விழுப்புரம் மாவட்டமே சோகமயமாக காட்சியளித்தது. கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஏராளமான தி.மு.க.வினர் வாகனங்களில் சென்றனர்.

    கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×