search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firecracker Factory Explosion"

    • விருதுநகரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    • நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
    • விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி தகவல்

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து பற்றி தகவல் அறித்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாகவும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×