என் மலர்

  நீங்கள் தேடியது "Extra"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 'பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  ×