search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "British PM"

    • பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது
    • போரிஸ் ஜான்சன் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே வலியுறுத்தி வந்தனர்

    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

    கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

    இதேபோல் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

    இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று, சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கினர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

    நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 59 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

    அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.

    அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.



    ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.

    ஆனால் இங்கிலாந்து எம்.பி.க்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி விட்டது.

    இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டு வந்தார்.

    இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

    அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.
    ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #BrexitDeal #TheresaMay 
    ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். #BrexitDeal #TheresaMay 
    பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். #TheresaMay #BrexitDeal #ConfidenceVote
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
     
    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்காகவும், ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.



    அதன்படி தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து தெரசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.

    பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். #TheresaMay #BrexitDeal  #ConfidenceVote
    ×