search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AMDK"

    • விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ள எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளார்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் வேகம் கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சி இருப்பதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க அதிரடியாக தயாராகி வருகிறது. பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளும் முன்வந்துள்ளன.

    இந்த கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தோழமை கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி பதவிகளிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து பலப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்த பூத் கமிட்டிகளை மேற்பார்வையிடுவதற்காக 82 பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட்டு உள்ளன. அடுத்தக் கட்டமாக கட்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக அளவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

    பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக அனைத்து தொகுதிகளிலும் ரகசிய பார்வையாளர்களை நியமித்து கட்சியினரை கண்காணிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு இதுபோன்ற புதிய அணுகுமுறைகள் பலவற்றை கையாள முடிவு செய்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சி பணிகளில் மந்தமாக செயல்படும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கவும் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்படும் இந்த ரகசிய பார்வையாளர்கள் தொகுதி வாரியாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு அ.தி.மு.க. தலைமைக்கழகத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். உளவு பிரிவு காவலர்கள் போல இவர்கள் செயல்பட இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில்தான் அ.தி.மு.க. சறுக்கலை சந்தித்து இருந்தது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை வென்றிருந்தது.

    இதுபோன்று தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வெற்றியை ஈட்ட கடுமையாக உழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற தேர்தலின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    கட்சி பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது பற்றியும் இன்றைய கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுடன் அவர் விரிவாக விவாதித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் வலுவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

    சரியான முறையில் செயல்படாத பூத் கமிட்டி நிர்வாகிகள் நிச்சயமாக மாற்றப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இப்படி பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ள அதிரடி வியூகம் அ.தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்து மட்டத்தில் உள்ள நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள புதிய அணுகுமுறை மற்றும் ரகசிய கண்காணிப்பு திட்டம் ஆகியவை "நாம் ஒழுங்காக செயல்பட வேண்டும்" என்கிற எண்ணத்தை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ள எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளார். அப்போது அதில் மாவட்ட செயலாளர்கள் யாரும் சுணக்கமாக செயல்பட்டிருந்தால் அவர்களை அதிரடியாக நீக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.

    மேலும் ரகசிய பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி கட்சியில் செயல்படாமல் இருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் வேகம் கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சி இருப்பதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
    • 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் மதியம் 12.30 மணி வரை காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்ட அ.ம.மு.க. வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டது.

    வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

    ×