search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk General Body Meeting"

    • சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை
    • தலைமை அலுவலகத்திற்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.

    அதன்பின்னர் ஆர்டிஓ சாய் வர்தினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்த ஓபிஎஸ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை கட்சியில் இருநது நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் கூறினார். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார்.
    • பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. தனது கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு

    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை உரிய நடைமுறைய பின்பற்றாமல் நடத்தியதாக கூறி, அந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தற்போது ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் பொருளாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை மாவட்ட முன்னாள் செயலாளர் என்றும் சூரியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு உத்தரவு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரை.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

    ×